Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

அன்புச்சிறை! - நகைச்சுவை கதை

“என்னங்க அழறிங்க?”

“இது நமது ஐம்பதாவது திருமண நாள்!”
“அதுக்காக..அழணுமா?
“உணர்ச்சிவசப்படறேன்…அவ்வளவுதான்!”
“ஓ அப்படியா?”
“ஐம்பதாண்டுக் காலமா உன்னுடைய அன்புச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கிறேன்!”

”திடீர்னு ஏன் சிறை உதாரணம் ஞாபகத்துக்கு வருது!”
”இப்பதான் பேப்பர்லே படிச்சேன். இங்கிலாந்துல மிதக்கும்
சிறைச்சாலைகள் வரப்போகுதாம்!”

அது எப்படி?

”உபயோகப்படாத போர் விமானம் தாங்கிக்கப்பலை
சிறைச்சாலையா மாற்றலாமான்னு பார்க்கறாங்களாம்!”
”எதுக்காக அப்படி?”
”இட நெருக்கடி…அதே நேரம் கைதிகளின் எண்ணிக்கை அதிகம்…
என்ன பண்றது…அதனால கப்பல்ல கைதிகளை வச்சுடறதுன்னு
முடிவு பண்றாங்க”

”எவ்வளவு பேரை அடைக்க முடியும் அதுல?”
”1500 பேர் வரைக்கும் அதுல இருக்க முடியுமாம்!”
”கைதிகள் சுலபமா தப்பிக்க முடியாது!”
”என்னை மாதிரி!”
”என்ன சொல்றீங்க?”

”உனக்கு ஞாபகம் இருக்கா…50 வருஷத்துக்கு முன்னாடி நீயும்
நானும் ஒரு குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்தப்போ,
உங்கப்பா நம்மை கையும் களவுமா பிடிச்சுட்டார்…
அப்போ அவர் என்ன சொன்னார்…’’மரியாதையா என் மகளைக்
கல்யாணம் பண்ணிக்கோ! இல்லேன்னா உன்னை 50 வருஷம் உள்ளே
தள்ளிப்புடுவேன்….கல்யாணமா…ஜெயிலா இப்பவே முடிவு
பண்ணிக்கோ’’ன்னார்

நான்…உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்…
அது…அது…அதனால…”

என்ன இது மறுபடியும் அழறீங்க…?

அது வந்து ஒண்ணுமில்ல… அன்றைக்கு நான் ஜெயில்னு முடிவு
எடுத்திருந்தா இன்றைக்கு நான் விடுதலை ஆயிருப்பேன்.
இல்லையா…அதை நினைச்சுப் பார்த்தேன்!


நன்றி
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. "நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்றது.

"நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை" என்றது கொக்கு.

"மனசு சரி இல்லையா... ஏன்?' என்றது மீன்.

"அதைஏன் கேட்கிறாய்..." என்று பிகு பண்ணியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்"

"சொன்னால் உனக்குத் திக் என்றாகும்."

மீனுக்குப் பரபரத்தது.

"சொன்னால்தானே தெரியும்"

"வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்..." என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே"

"என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்."

"அய்யய்யோ!"

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

"நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

"அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

"ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்" என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு "பக்"கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

"கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்" என்றது நண்டு.

"அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?"

"எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன."

"ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்" என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.


முந்தைய பகுதிகள்

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இற...

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் ௨

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

பிடித்திருந்தால் ஓட்டு போடவும்

http://ta.indli.com/site/tamilpadaipugal.blogspot.com

தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாப்பிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.

"மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......"

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

தமிழ்படைபுகள் - ஜூலை மாத படைப்புகளின் தொகுப்பு!

முதல் படைப்பு: கணினி தமிழ்

தமிழக வரலாறு

பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்

இன்றொரு தகவல்: youtube.com இணையதளத்தில் அதிகம்பேர் கண்டுகளித்த காணொளி

தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

இன்றொரு தகவல்: உலகிலே மிக உயரமான கட்டிடம் எது?

தலைவலி தீர பத்து ஆலோசனைகள்

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

தெனாலிராமன் கதைகள்! ராஜகுருவின் நட்பு ஏற்படுதல்

இன்றொரு தகவல்: சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது?

இந்திய கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைக்கு கரிசனம் காட்டுகிறது சீனா:அமெரிக்க செனட்

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - யூவராஜாவிடம்

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

தெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல்

இன்றொரு தகவல்! நிலா மற்றும் பூமி உருவானது எப்படி?

தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழிக்குப் பழி வாங்க...

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

இன்றொரு தகவல்! பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது...

இன்றும் துடிக்கின்றன...

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி


உண்ணாநோன்பு மருத்துவம்

இந்தோனேஷியாவில் மவுண்ட் லோகன் எரிமலை வெடிப்பு

இறு‌தி‌ப்போ‌ரி‌ல் மனித உரிமை மீறல் புகார்களை இல‌‌...

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர...

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் ...

பஞ்சதந்திரக் கதைகள்

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்ட...

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?


சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டார் விஜயகாந்த்

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் 2

தெனாலிராமன் கதைகள் - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது - வீரமங்கை கல்பனா சால்வா

இலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்ப்பாட்டம்

பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார்

தெனாலிராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இறந்த குரங்கின் கதை


ஒரு குழந்தையின் பாசம்! துடிப்பு! ஆத்திரம்!

மாத்தியோசி - சிறுகதை

தெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்

செம்பருத்தியின் மருத்துவக் குணம்

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

மனைவி அமைவதெல்லாம்! - சிறுகதை

மாத்தியோசி - சிறுகதை

வரிசையாக உள்ள பத்து வீடுகளுக்கு மத்தியில் உள்ளதுதான் மதுபாலன் வீடு.

ஒரு நாள் நள்ளிரவில் அவரது வீட்டில் திருடன் புகுந்து கத்தியைக் காட்டி பீரோவைத் திறக்கச் சொல்லி மிரட்டவே, அவனை இடித்துக் தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு “” தீ … தீ… ஓடிவாங்க!” என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்தனர்.

“”திருடன்னு கத்த வேண்டியதுதானே!” என்று மதுபாலனின் மனைவி கேட்கவே, “”திருடன்னு சத்தம் போட்டா யாருமே பயந்துகிட்டு வெளியே வரமாட்டாங்க. ஆனா “தீ… தீ…ன்னு’சத்தம் கேட்டவுடனே எங்க நம்ம வீட்டுக்கும் “தீ’ பரவிவிடுமோன்னு பயத்துல எல்லாரும் ஓடிவந்திட்டாங்களே!” என்று கூறிய கணவனின் சமயோசித புத்தியை நினைத்து பெருமைப்பட்டாள்.


மு.சிவசுப்பிரமணியன்

நன்றி; குமுதம்

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம் அதை சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவும் விளங்கினான். ஆனால்...

அவனுக்கு பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும் மூடர்களாகவும் இருந்தார்கள்.

இப்படி இருந்தால் எப்படி? நமக்கு பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன? என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது.

கல்வியும் தர்மகுணமும் இல்லாத பிள்ளைகள் இருந்தாவதென்ன?

'பால் கெடாத எருமைகளைக் காப்பாற்றினால் அவைகளால் பலனுண்டா?'

பிள்ளை என்று பிறந்தால் இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு அவர்கள் என்ன தவம் செய்தார்களோ என்றெல்லவா பிறர் போற்றும்படி இருக்க வேண்டும். நமக்கோ சுதிகேட்ட இசைபோல் மதிகெட்ட பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களே.
- என்றெல்லாம் அவன் மனம் வருந்து பெருமூச்சி விட்டது.

பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடயே 'எண்ணிக்கைக்குப் பலவாகப் பிறந்துள்ள என் பிள்ளைகள் அறிவிலிகளாக இருக்கிறார்கள். இந்த ராஜ்ஜியத்தின் எதிகாலத்துக்குரியவர்களாகிய அவர்களை இங்கே வந்திருக்கும் உங்களில் யாராவது நீதிசாஸ்திர உபதேசத்தால் மறுபிறவி பெற்ற அறிவாளிகளாக்க முடியுமா?' என்று மனம் வருந்திய நிலையில் கேட்டான்.

வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாஸ்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார்.

பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்

'பெண்ணியம்' - சமூக அமைப்பில் பெண்ணுக்குரிய உரிமைகள் ஒடுக்கப் படுவதை எடுத்துரைப்பது. பெண் பற்றிய புதிய கண்ணோட்டமும் விழிப்புணர்வும் தான் பெண்ணியம்.

திட்டமிட்டு ஆண்களால் ஆணை முதன்மைபடுத்தி பெண்ணை ஒடுக்கும் கருத்தாக்கம் பண்பாடு என்ற பெயரில் கட்டமைக்கப் பட்டுள்ளது. பெண் குறித்த தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமூகம் மற்றும் இலக்கியங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். சமூக பண்பாட்டுப் பொருளாதார அடிப்படையில் ஓர வஞ்சனையுடன் நடத்தப்பட்ட பெண் அடக்குமுறையின் எதிர்விளைவாக பிறந்ததுதான் பெண்ணியம்.

பெண் கல்வி கற்று வேலைக்குப் போகும் சூழலை உருவாக்கி விட்டாலே பெண்ணை உயர்த்தியது ஆகுமா? அவள் வாங்கும் சம்பளம் அவளின் சமத்துவத்தை தந்துவிடுகிறதா? சம்பாதிக்கும் பெண்ணைப் பெற்றோர் ஆணுக்கு சமமாக கருதுகின்றனரா? இதற்கு வைரமுத்துவின் கவிதை பதில் சொல்லும்.

கல்யாணத் துறவுபூண்டு
பெற்றோருக்கு
முதல்தேதி அமுதசுரபிகளாய்
வாழ்ந்துகொண்டு
இன்னும் நம்மிடை
எத்தனை மணிமேகலை?


பெண்ணியக் கோட்பாடுகள் சில உருவாக்கப்பட்டுள்ளன. அவை:

  • ஆணின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் பெண் குடும்ப அமைப்பை விட்டு விலகுதல்.
  • அலுவல் மகளிர் இல்வாழ்க்கையில் ஒடுக்கப்படுவதை கேள்விக்கு உட்படுத்தல்.
  • கற்புநெறியில் வகுக்கப்பட்ட பாலின வேறுபாட்டை விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு திறனாய்வு செய்தல்.
  • இதழ்களில் பெண் இழிவுப்படுதப்படுவதைக் கண்டித்தல்.
  • பெண் பற்றிய அடக்குமுறைக் கருத்தியலை உடைதேறிதல்
ஆகியவை நடப்பியலானால் பெண்ணியம் தழைக்கும். இவ்வாறு சுருக்கக் குறிப்பு எடுதப்பிறகு அதன் அடிப்படையில் எளிய விளக்கங்களுடன் கட்டுரையாக்கம் அமைத்தல் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட கட்டுரைகள் அடுத்த படைப்புகளில் வெளிவரும்.

நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com

என்னுடைய முதல் படைப்பின் எழுத்துப்பிழைகளை சுட்டிகாட்டிய என் நண்பர் நாராயணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கணினி தமிழ்


'கணினி தமிழ்' என்ற தொடருக்கான பொருளை முதலில் விளக்குதல் - கணினி இன்றைய காலத்தின் இன்றியமையாத் தேவை ஆகும். நாளை உலகம் கணினி உலகம். தமிழ்மொழி கணினியில் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படாமல் காக்கப்படுவதும், கணினிப் பயன்பாட்டிற்கு தமிழை உரியதாக ஆக்கும் முயற்சிகளும் கணினி தமிழ் எனப்படும்.

கணினி தமிழ் தட்டச்சு:
தமிழ்த்தட்டச்சு என்பது மிகப் பழைய தொழில் நுட்பம். இன்று கணினி வழியாக மிக நேர்த்தியாக தமிழ் மொழியிலும் தட்டச்சு முறை வந்துவிட்டது. இதன் வழியாக தொலைதூரத் தகவல்களை தமிழ்மொழியில் அனுப்ப வாய்ப்பு இருப்பதை பரவலாக்க முனைவது கணினி தமிழை வளர்க்கும்.

கணினி தமிழ் இதழ்:
மின் இதழ் (Electronic Journal) பல ஆண்டுகளுக்கு முன்பே உலக தகவல்தொடர்பு உலகில் அறிமுகமாகிவிட்டது. இதன் வளர்ச்சியாக தினமலர், குமுதம் போன்ற இதழ்கள் இன்று கணினியில் வலைதளங்களில் இடம்பெற்றுவிட்டன. இது இன்னும் பரவலாக்கபடவேண்டும்.

கணினி அஞ்சல்:
'இ-மெயில்' (Electronic Mail) என்னும் மின்னஞ்சல் இன்று கணினியில் புழக்கத்தில் உள்ளது, இது தமிழ்மொழியிலும் அறிமுகமாகி விட்டது.

கணினி தமிழ் இணையம்:
'இன்டர் நெட்வொர்க்' என்பதன் சுருக்கம் இன்டர்நெட் (Internet) எனப்படும். இது தமிழில் இணையம் என்று சுட்டப்படும். உலகமெங்குமுள்ள பல தகவல் மையங்கள் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை சேகரிக்க முடியும், இது ஆங்கிலத்திலேயே பெருவழக்காய் உள்ளது. தமிழின் கலை களஞ்சியமாய் இது வளரும் நாளே கணினி தமிழ் வளர்ந்த நாளாகும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More