பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்

'பெண்ணியம்' - சமூக அமைப்பில் பெண்ணுக்குரிய உரிமைகள் ஒடுக்கப் படுவதை எடுத்துரைப்பது. பெண் பற்றிய புதிய கண்ணோட்டமும் விழிப்புணர்வும் தான் பெண்ணியம்.

திட்டமிட்டு ஆண்களால் ஆணை முதன்மைபடுத்தி பெண்ணை ஒடுக்கும் கருத்தாக்கம் பண்பாடு என்ற பெயரில் கட்டமைக்கப் பட்டுள்ளது. பெண் குறித்த தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமூகம் மற்றும் இலக்கியங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். சமூக பண்பாட்டுப் பொருளாதார அடிப்படையில் ஓர வஞ்சனையுடன் நடத்தப்பட்ட பெண் அடக்குமுறையின் எதிர்விளைவாக பிறந்ததுதான் பெண்ணியம்.

பெண் கல்வி கற்று வேலைக்குப் போகும் சூழலை உருவாக்கி விட்டாலே பெண்ணை உயர்த்தியது ஆகுமா? அவள் வாங்கும் சம்பளம் அவளின் சமத்துவத்தை தந்துவிடுகிறதா? சம்பாதிக்கும் பெண்ணைப் பெற்றோர் ஆணுக்கு சமமாக கருதுகின்றனரா? இதற்கு வைரமுத்துவின் கவிதை பதில் சொல்லும்.

கல்யாணத் துறவுபூண்டு
பெற்றோருக்கு
முதல்தேதி அமுதசுரபிகளாய்
வாழ்ந்துகொண்டு
இன்னும் நம்மிடை
எத்தனை மணிமேகலை?


பெண்ணியக் கோட்பாடுகள் சில உருவாக்கப்பட்டுள்ளன. அவை:

  • ஆணின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் பெண் குடும்ப அமைப்பை விட்டு விலகுதல்.
  • அலுவல் மகளிர் இல்வாழ்க்கையில் ஒடுக்கப்படுவதை கேள்விக்கு உட்படுத்தல்.
  • கற்புநெறியில் வகுக்கப்பட்ட பாலின வேறுபாட்டை விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு திறனாய்வு செய்தல்.
  • இதழ்களில் பெண் இழிவுப்படுதப்படுவதைக் கண்டித்தல்.
  • பெண் பற்றிய அடக்குமுறைக் கருத்தியலை உடைதேறிதல்
ஆகியவை நடப்பியலானால் பெண்ணியம் தழைக்கும். இவ்வாறு சுருக்கக் குறிப்பு எடுதப்பிறகு அதன் அடிப்படையில் எளிய விளக்கங்களுடன் கட்டுரையாக்கம் அமைத்தல் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட கட்டுரைகள் அடுத்த படைப்புகளில் வெளிவரும்.

நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com

என்னுடைய முதல் படைப்பின் எழுத்துப்பிழைகளை சுட்டிகாட்டிய என் நண்பர் நாராயணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

1 comments:

தொடருங்கள் ,வாழ்த்துக்கள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More