பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார்

பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார். இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

திரு ரவிச்சந்திரன் அவர்கள் தமிழ் சினிமாவில் 1960 1970 காலங்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருந்தார். அவரது மனைவியின் பெயர் ஷீலா அவர் ஒரு மலையாள நடிகை. அவரது மகன்கள் அம்சவர்தன் மற்றும் ஜார்ஜ் ஆகியோரும் நடிகர்கள்.
மறக்க முடியாத படங்கள்:

ரவிச்சந்திரன் அவர்களின் படத்தில் குறிப்பிட்ட சில படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆங்கில படத்திற்கு நிகரான விறுவிறுப்பு மிக்க படங்கள் அவை..
(Action Thriller Movies)

அதே கண்கள்
தன தாயை கொன்றவனின் குடும்பத்தை பழிவாங்கும் ஒரு இளைஞனின் கதை. இதில் ரவிச்சந்திரன் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். அதிலும் அந்த இளைஞனை அடையாளம் காணும் அந்த காட்சி மிகவும் விறுவிறுப்பானது . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.. அந்த படத்தில் நடிகை காஞ்சனா, நடிகர் அசோகன் ஆகியோரின் நடிப்பும் மிகவும் கவரும்படி இருக்கும்.



மூன்றெழுத்து
புதையல் இருக்கும் மூன்று குறிப்புகள், மூன்று குறிப்பும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் அவற்றை கண்டு பிடிக்கும் கதை. இந்த படத்தில் நடிகர் அசோகனின் நகைச்சுவை அற்புதமாக இருக்கும். இந்த படத்தின் கதாநாயகி புரட்சிதலைவி ஜெயலலிதா.



இந்த வரிசையில் மூன்றாவதாக எனக்கு பிடித்த படம் ஒன்று இருக்கிறது ஆனால் எனக்கு பெயர் தெரியவில்லை. இதில் நடிகர் முத்து ராமன் சின்ன ராஜாவாக நடித்திருப்பார்... ஆனால் யார் சின்னராஜா என்பதை கண்டுபிடிக்கும் கதை. இதில் ரவிச்சந்திரன் நடிகர் நாகேஷ் நடிகர் மனோகரன் ஆகியோர்களுக்கு இடையே நடக்கும் போட்டி ரசிக்கும் படியாக இருக்கும்... இதில் கதாநாயகியாக நடித்திருப்பார் புரட்சிதலைவி ஜெயலலிதா.


உங்களுக்கு நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கவும்.

அவர் காலமான இந்த நாளில் அவரை பற்றிய நினைவை பகிர்ந்து கொண்டு... இதன்மூலம் அவருக்கு என் இறுதி வணக்கத்தை செலுத்திகிறேன்...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More