சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆதிமுகவை தவிர அணைத்து அரசியல் கட்சிகளும் சமச்சீர் கல்வியை ஆதரிக்கின்றன. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் சமசீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும் என்று இன்று அறிக்கை விடுத்தார்.. இனியாவது ஆதிமுக அரசு தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்து சமச்சீர் கல்வியை அமல்படுத்தவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை..

அப்படி அந்த பாட புத்தகங்களின் மீது என்ன கோவம்

கடந்த திமுக அரசின் கல்வித்துறையில் எந்த கட்டமைப்பிலும், எந்த மட்டத்திலும் ஜனநாயகத்தன்மை என்பது கிடையாது. கல்வி அதிகாரிகள் யாரும் சுயேட்சையாக இயங்கமுடியவில்லை. அணைத்து மட்டத்திலும் அரசியல் தலையீடு மற்றும் திணிப்பு என்பது இருந்தது இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்று பாடப்புத்தகங்கள் வரை வந்துவிட்டது. இவ்வளவு குழப்பத்திற்கும் திமுக அரசின் அரசியல் திணிப்பே காரணம் என்று பலர் கருதுகின்றார்கள். ஒன்று முதல் பாத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாட புத்தகங்களில் வரும் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள் சங்ககால இலக்கியங்களின் திருட்டு என்பதுதான் உண்மை ஆகும். இது கலைஞர் எழுதிய பாடலாக சித்தரிக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் மோசடி இப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல்வரி கணியன் பூங்குன்றனாரின் வரி என்பதும் சங்க இலக்கியத்திலிருந்து இப்பாடல் கையாளப்பட்டு எழுதப்பட்டுள்ளது என்பதும் எல்லோரும் அறிந்ததே. மேலும் 10 ஆம் வகுப்பு ஒரு பாடம் முழுக்க முழுக்க கலைஞரின் சுய புராணம் பாடுகிறது. மேலும் 6 ம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகம் சென்னை சங்கமத்தில் தப்பாட்டம் பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்வியோடு துவங்குகிறது பாடம் . ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் புவியியல் பாடபகுதியில் சூரியன் உதயமாவது கலைஞர் டிவியில் வரும் லோகோ போன்று உள்ளது. அதே பாடத்தில் இந்திய வரைபடத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அதில் கேரளம், தமிழ்நாடு இரண்டு மாநிலத்தையும் சிவப்பு, கருப்பாக காட்டுகிறது படம். இப்பாடப்புத்தகத்தில் திமுக அரசின் பக்குவமற்ற செயலை காட்டுகிறது.

இது போன்ற அரசியல் திணிப்பு நடவடிக்கைகளை மட்டுமே கணக்கில் கொண்டு புத்தகங்கள் சரியல்ல, தரமல்ல என்ற முடிவுக்குச் சென்றால் அது முட்டாள் தனமான முடிவாக அமையும்.

இல்லை நாங்கள் தரமான கல்வி கொடுப்பதற்க்காகவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே சமசீர் கல்வியை அமுல்படுத்த தயங்குகிறோம் என்று சொன்னால்? அப்படி நீங்கள் கல்வி மேல் மிகவும் அக்கறையுடன் செயல் படுகிறீர்கள் என்றால்... கல்வியை இலவசமாக கொடுங்கள். metriculation school அனைத்திலும் இலவச கல்வி கொடுங்கள்... இப்படி நீங்கள் செய்தீர்களானால் பாடபுத்தகத்தின் திறன் தன்மை உண்மையாகவே அதுவாகவே உயரும்...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More