உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - யூவராஜாவிடம் சில கேள்விகள்

"வருகிற தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்" என்று வாரத்திற்கு இருமுறை பேட்டி கொடுக்கிறார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் 'யூத்து யூவராஜா'.

யூவராஜா அண்ணே நீங்க தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா. இல்லை எங்காவது வெளியூரில் சுற்றித்திருந்து கொண்டு விடுமுறைக்கு இங்கு வரும்போது இதுபோல் பேட்டி கொடுக்கிறீர்களா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை பார்த்தபின்பும் ஏன் இப்படி பேசுகிறீர்கள். திமுக தொண்டர்களின் ஓட்டு மட்டும் உங்களுக்கு விழவில்லை என்றால். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 101 ஓட்டுக்கள் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது இருப்பீர்கள். நீங்கள் ஒரு தேசிய கட்சி ஆகவே இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலையும் உங்களால் தனித்து போட்டி இட்டு ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது. தன்னுடைய மனைவிக்கு ஒரு தொகுதில் சீட் வாங்கி கொடுத்து பின் அவருக்கு "loly pop" வாங்கி கொடுத்த தலைவர் உங்கள் கட்சியில்தான் இருக்கிறார்.

கீழே நன் பட்டியல் இட்டு கட்டுவதை மனதார நாங்கள் அப்படி இல்லை என்று சொல்லிவிட்டு நீங்கள் தனியாக தேர்தலில் நில்லுங்கள்.. நானும் உங்கள் கட்சியில் சேர்த்து விடுகிறேன்.

1 சத்ய மூர்த்தி பவனில் உங்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் (அணைத்து கோஷ்டியினரும்) எதாவது ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக முடிவு செய்ய முடியுமா? உதாரனத்திற்க்கு இப்போது உங்கள் கட்சியின் தமிழக தலைவர் பதவி காலியாகத்தான் இருக்கிறது.

2 அப்படி நீங்கள் தேர்வு செய்து சண்டை போட்டுக்கொள்ளாமல், ஒருவருடைய வேஷ்டி கூட கிழியமால், சட்டை கூட கிழியாமல், உங்களால் சத்ய மூர்த்தி பவனில் இருந்து வெளில் வர முடுயுமா?

3 தமிழக நலனுக்காக தமிழர்கள் நலனுக்காக உங்கள் கட்சியில் எதாவது திட்டமுண்டா? அட உங்க கட்சியின் கொள்கைதான் என்னப்பா?

4 தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு உங்கள் கட்சியை சேர்ந்த ஒரு தலைவராச்சி மதிய அரசை கண்டித்தோ இலங்கையை கண்டித்தோ ஒரு இருக்கை விட்டதுண்டா?

அப்புறம் எப்படினா நீங்க தமிழ்நாட்டு தேர்தல்ல தனியா நிப்ப... பொய் ஒரு ஓரமா முட்டு சந்துல பொய் நில்லு...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More