தயாநிதி மாறனுக்கு அடுத்து லல்லு பிரசாத் யாதவ்? 2G Scam News in Tamil

தயாநிதி மாறன் மத்திய மந்திரி பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த பதவி யாருக்கு கிடைக்கும் என்று பரபரப்பாக டெல்லியில் இருந்து செய்திகள் தொலைகாட்சியின் மூலமாக வந்தவண்ணம் உள்ளன, முன்னால் மதிய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி ஆர் பாலுவுக்கு இந்த பதவி கொடுக்கப்படும் என்று முன்பு செய்திகள் வந்தன. ஆனால் பிரதமருக்கு டி ஆர் பாலுவிடம் அந்த பதவியை கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது, தி மு க வும் நாங்கள் யாரும் அடுத்த மந்திரி பதவிக்காக சோனியாவிற்கு கடிதம் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி நாளை சனிக்கிழமை கருணாநிதியை சந்திக்கிறார். இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவுக்கு இந்த பதவி கிடைக்ககூடும் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அப்படி வேறு கட்சியை சேர்ந்த யாருக்காவது அப்பதவியை கொடுத்தல் இரு கட்சிகளுக்கும் உள்ள உறவு பாதிக்குமா?

இல்லை அடுத்த இலக்காக அழகிரின் பதவி பறிக்கப்படும் வரை திமுக அமைதி காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More