இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு

திமுக அழைப்பு விடுத்துள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் முன்பு நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இநதப் போராட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் இன்று வழக்கம் போல பள்ளிக்கூடங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. (ஏன் சொல்லமாட்டீர்கள் உங்களுக்கு என்ன கவலை)

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மாணவச் செல்வங்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்துள்ளது. எனவே இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இவங்க சண்டைல நம்ம பசங்க படிப்பு போச்சே!
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் பாடபுத்தகங்களை கொடுத்தால் சரி!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More