தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டார் விஜயகாந்த்

மக்கள், தங்களது பிரச்சினை தொடர்பாக தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை தேமுதிக வெளியிட்டுள்ளது.

தொகுதியில் உள்ள பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூற அவர்களை தேடி அலைய வேண்டாம் என்றும், எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சனையை தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தால் அதை படித்துப் பார்த்து பிரச்சனையை தீர்க்க உதவ வசதியாக இருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com - ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் (http://www.dmdkparty.com/dmdk/?page_id=65) முகவரியை வெளியிட்டுள்ளார்.

இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.

இதைபோல் புதுமையான சுவாரஸ்யமான விசயங்களை செய்யும் விஜயகாந்தை பாராட்டுவோம்.

ஆனால் ஒரு எதிர்கட்சியாக இருந்துகொண்டு அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More