Showing posts with label தமிழ் செய்திகள். Show all posts
Showing posts with label தமிழ் செய்திகள். Show all posts

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:

இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு - தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தார்

இந்தியா வந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.இதற்காக அவர்களிடம், மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் உயர்நிலைக் குழுவினர் தில்லி வந்துள்ளனர். மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மீராகுமார் அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்.பி.க்கள், இலங்கை நாடாளுமன்றக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய மீரா குமார், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்றார்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழரை கோடி தமிழர்களின் உணர்வை இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும் மீண்டும் உதார்சினப்படுத்துகிறது.

சபாநாயகர் மீரா குமார் அவர்களே...

இந்தியா என்பது இருபத்தெட்டு மாநிலங்களை உள்ளடக்கியது. அதில் தமிழ்நாடும் ஒன்று. எங்கள் உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்... எங்கள் தொப்புள்கொடி உறவுகளை மிகவும் கொடூரமான முறையில் உலக வரலாற்றிலே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த சிங்கள போற்குற்றவாளிகளை இந்திய நாடாளமன்றத்தில் அனுமதித்து, எங்களை முகம் சுளிக்க வைத்தது எதற்காக.

நீங்கள் என்ன அயல் கிரகத்தில் இருந்து வந்தவரா? இங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாத? தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதித்துள்ளது. ஆனால் தில்லியில் அவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்ப்பு. எதற்காக இந்த செயல். நீங்கள் சேனல் 4 காணொளியை பார்க்கவில்லையா?. இந்தியாவில் இனப்பிரிவினையை தூண்டும் செயலாகவல்லவா இது இருக்கிறது?. உயரிய பதவியில் நீங்கள் இருப்பதால்... என்னால் உங்களை திட்டமுடியவில்லை. வாயில் நான் முனுமுனுப்பதை இங்கு தட்டச்சு செய்ய முடியவில்லை.
ஏழரை கோடி தமிழர்களின் முதுகில் கத்தியால் குத்திவிட்டீர்கள் சபாநாயகர் அவர்களே..


இதற்காக ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் வருதபடுவீர்கள்........

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது,


இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.


தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை.


அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.


இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம்.


தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.


இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும்.


ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்.


இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.

தமிழீழம், இலங்கை செய்திகள், திமிழ் செய்திகள், செய்திகள்

இலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவைத் திரட்ட டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே மதிமுக தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சமச்சீர் கல்வி முறையை உடனே அமலாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க அரசு, தன் போக்கை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15ம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறு‌தி‌ப்போ‌ரி‌ல் மனித உரிமை மீறல் புகார்களை இல‌‌‌ங்கை ஆய்வு செய்ய இந்தியா வற்புறுத்தல்

விடுதலை‌ப் புல‌ிகளு‌க்கு எ‌திரான இறு‌தி க‌ட்ட‌ப் போ‌ரி‌‌ன்போது இல‌ங்கை இராணுவ‌த்‌தின‌ர் நட‌ந்து கொ‌ண்ட ‌ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல் புகா‌ர்களை ‌வி‌ரிவாக ‌ஆ‌ய்வு செ‌ய்யுமாறு அ‌ந்நா‌ட்டை இ‌ந்‌தியா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

டெ‌ல்ல‌ி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மத்திய அயலுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சனையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

இந்தியாவை பொறுத்தவரை, போர்க்குற்றச்சா‌ற்றுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை அயலுறவு அமை‌ச்ச‌ர் டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம். இந்த குற்றச்சா‌ற்றுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் எ‌ன்று விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More