Showing posts with label Social. Show all posts
Showing posts with label Social. Show all posts

போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை போக்கு வரத்து காவல்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின் சீரியல் எண்ணை அவர்கள் பணியின் போது வைத்திருக்கும்... நோட் புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை மனப்பாக்கம் அருகே போக்கு வரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த வழியாக செல்போனில் பேசிக் கொண்டு வந்த கார் டிரைவரை மடக்கினார்.

அந்த டிரைவரை பார்த்து செல்போன் பேசியபடி ஓட்டியதால் ரூ.1100 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அவர் காரின் பின் பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் சாரிடம் பேசுங்கள் என்று கூறியதற்கு சாராக இருந்தாலும், மோராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஸ்பார்ட் பைன் ரூ.1100 கட்ட வேண்டும், இல்லை என்றால் என்னை கவனித்து விட்டு செல்லுங்கள் என்று கறாராக கூறினார்.

டிரைவருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை திறந்தார். அவரை பார்த்த போலீஸ் காரர் அதிர்ச்சி அடைந்து வணக்கத்தை தெரிவித்தார். காரில் வந்தது சென்னை காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு பணிபுரியும் உயர் அதிகாரி.

அந்த அதிகாரி போலீஸ்காரரை பார்த்து உன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை எடுங்கள் என்று கூறிய போது, பாக்கெட்டில் அவர் ரூ.1000 வைத்திருந்தார். ஏது இவ்வளவு பணம் என்று கேட்ட போது அவர் ஆடிப் போனார். உடனே காரில் வந்த அதிகாரி, போக்குவரத்து போலீசார் யாரும் ஒழுங்காக பணி செய்வதில்லை என்றும் கலெக்ஷன் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு காரில் சென்று விட்டார். அந்த செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கண்டிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் தான் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணிக்கு வந்து பிறகு வீட்டிற்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல பணத்தை கொண்டு வந்தாலும் அதிகாரிகள் சோதனையின் போது மாட்டிக் கொண்டால் உள்ளதும் போய்விடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து வருகிறார்கள்.

காவல் துறையில் ஒரு சிலர் செய்யும் தவறினால் அனைவருக்கும் களங்கமும், பாதிப்பும் ஏற்படுவதாக நேர்மையான போலீசாரும் புலம் புகிறார்கள்.

பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்

'பெண்ணியம்' - சமூக அமைப்பில் பெண்ணுக்குரிய உரிமைகள் ஒடுக்கப் படுவதை எடுத்துரைப்பது. பெண் பற்றிய புதிய கண்ணோட்டமும் விழிப்புணர்வும் தான் பெண்ணியம்.

திட்டமிட்டு ஆண்களால் ஆணை முதன்மைபடுத்தி பெண்ணை ஒடுக்கும் கருத்தாக்கம் பண்பாடு என்ற பெயரில் கட்டமைக்கப் பட்டுள்ளது. பெண் குறித்த தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமூகம் மற்றும் இலக்கியங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். சமூக பண்பாட்டுப் பொருளாதார அடிப்படையில் ஓர வஞ்சனையுடன் நடத்தப்பட்ட பெண் அடக்குமுறையின் எதிர்விளைவாக பிறந்ததுதான் பெண்ணியம்.

பெண் கல்வி கற்று வேலைக்குப் போகும் சூழலை உருவாக்கி விட்டாலே பெண்ணை உயர்த்தியது ஆகுமா? அவள் வாங்கும் சம்பளம் அவளின் சமத்துவத்தை தந்துவிடுகிறதா? சம்பாதிக்கும் பெண்ணைப் பெற்றோர் ஆணுக்கு சமமாக கருதுகின்றனரா? இதற்கு வைரமுத்துவின் கவிதை பதில் சொல்லும்.

கல்யாணத் துறவுபூண்டு
பெற்றோருக்கு
முதல்தேதி அமுதசுரபிகளாய்
வாழ்ந்துகொண்டு
இன்னும் நம்மிடை
எத்தனை மணிமேகலை?


பெண்ணியக் கோட்பாடுகள் சில உருவாக்கப்பட்டுள்ளன. அவை:

  • ஆணின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் பெண் குடும்ப அமைப்பை விட்டு விலகுதல்.
  • அலுவல் மகளிர் இல்வாழ்க்கையில் ஒடுக்கப்படுவதை கேள்விக்கு உட்படுத்தல்.
  • கற்புநெறியில் வகுக்கப்பட்ட பாலின வேறுபாட்டை விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு திறனாய்வு செய்தல்.
  • இதழ்களில் பெண் இழிவுப்படுதப்படுவதைக் கண்டித்தல்.
  • பெண் பற்றிய அடக்குமுறைக் கருத்தியலை உடைதேறிதல்
ஆகியவை நடப்பியலானால் பெண்ணியம் தழைக்கும். இவ்வாறு சுருக்கக் குறிப்பு எடுதப்பிறகு அதன் அடிப்படையில் எளிய விளக்கங்களுடன் கட்டுரையாக்கம் அமைத்தல் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட கட்டுரைகள் அடுத்த படைப்புகளில் வெளிவரும்.

நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com

என்னுடைய முதல் படைப்பின் எழுத்துப்பிழைகளை சுட்டிகாட்டிய என் நண்பர் நாராயணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக வரலாறு

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.


கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..


கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.


14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.


17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.


20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


நன்றி: தமிழ் விக்கிபீடியா

கணினி தமிழ்


'கணினி தமிழ்' என்ற தொடருக்கான பொருளை முதலில் விளக்குதல் - கணினி இன்றைய காலத்தின் இன்றியமையாத் தேவை ஆகும். நாளை உலகம் கணினி உலகம். தமிழ்மொழி கணினியில் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படாமல் காக்கப்படுவதும், கணினிப் பயன்பாட்டிற்கு தமிழை உரியதாக ஆக்கும் முயற்சிகளும் கணினி தமிழ் எனப்படும்.

கணினி தமிழ் தட்டச்சு:
தமிழ்த்தட்டச்சு என்பது மிகப் பழைய தொழில் நுட்பம். இன்று கணினி வழியாக மிக நேர்த்தியாக தமிழ் மொழியிலும் தட்டச்சு முறை வந்துவிட்டது. இதன் வழியாக தொலைதூரத் தகவல்களை தமிழ்மொழியில் அனுப்ப வாய்ப்பு இருப்பதை பரவலாக்க முனைவது கணினி தமிழை வளர்க்கும்.

கணினி தமிழ் இதழ்:
மின் இதழ் (Electronic Journal) பல ஆண்டுகளுக்கு முன்பே உலக தகவல்தொடர்பு உலகில் அறிமுகமாகிவிட்டது. இதன் வளர்ச்சியாக தினமலர், குமுதம் போன்ற இதழ்கள் இன்று கணினியில் வலைதளங்களில் இடம்பெற்றுவிட்டன. இது இன்னும் பரவலாக்கபடவேண்டும்.

கணினி அஞ்சல்:
'இ-மெயில்' (Electronic Mail) என்னும் மின்னஞ்சல் இன்று கணினியில் புழக்கத்தில் உள்ளது, இது தமிழ்மொழியிலும் அறிமுகமாகி விட்டது.

கணினி தமிழ் இணையம்:
'இன்டர் நெட்வொர்க்' என்பதன் சுருக்கம் இன்டர்நெட் (Internet) எனப்படும். இது தமிழில் இணையம் என்று சுட்டப்படும். உலகமெங்குமுள்ள பல தகவல் மையங்கள் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை சேகரிக்க முடியும், இது ஆங்கிலத்திலேயே பெருவழக்காய் உள்ளது. தமிழின் கலை களஞ்சியமாய் இது வளரும் நாளே கணினி தமிழ் வளர்ந்த நாளாகும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More