Showing posts with label 2g. Show all posts
Showing posts with label 2g. Show all posts

ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம், அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், கனிமொழியால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் சிதம்பரமும் கூறியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் பிரதமரும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சேர்ந்து தான் ராசாவுடன் முடிவெடுத்துள்ளனர். இதனால், நாட்டுக்கு இழப்பு என்ற புகாரே தவறானது என்பது உறுதியாகிறது.

எப்போது நாட்டுக்கு இழப்பு என்ற வாதம் தனது பலத்தை இழக்கிறதோ.. அப்போதே கனிமொழி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலம் இழக்கிறது.

அதே போல இந்த விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்த அறிக்கையை ஒரு சாட்சியாக இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அவர்கள் தங்களது உரிமங்களை விற்பனை செய்யவில்லை. எனவே அதில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.

மாட்டிகொண்ட திமுக! ஊழலற்ற காங்கிரஸ்?

இது செய்தி

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

என் கருத்து

எப்படித்தான் அந்த பணம் விழுங்கும் முதலை தயாநிதி மாறனுக்கு மனது வந்ததோ ராஜனாமா செய்ய யப்பா... அவர் ராஜனாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை பிரதமரே அவரின் அன்னை சோனியா காந்தியில் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி இருப்பார்.

இப்போது மொத்தம் மூன்று திமுக அமைச்சர்கள் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக தயாநிதிமாறனும் உள்ளே போவது உறுதி. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு எக்கச்சக்க ஆதாரங்கள் உள்ளது. இதில் முக்கிய ஆதாரம் aircell நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனின் நேரடி வாக்குமூலம்.
ஏற்கனவே சண் தொலைகாட்சியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளே இருக்கிறார். சண் குழுமத்தின் தலைவர் கலநிதிமாறனும் பல வழக்குகளில் சிக்கும் நிலைமை தற்போது நிலவுகிறது. ஏன் இவர்தான பெரிய பணம் விழுங்கும் முதலை... தமிழக கேபிள் நிறுவனமும் அரசாங்கத்தின் சொத்தாக்கப்படுகிறது. திமுக வின் ஆதரவும் அந்த அளவுக்கு இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. ஆகவே சன் குழுமத்திற்கு ஏழரை சனி ஆரம்பம்.

திமுக வின் நிலை என்ன

திமுகவை பொருத்தவரையில் தயாநிதிமாறனின் கைது ஒருபுரம் சோகமாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர திமுகவினர் அனைவருமே மேல்மட்ட தலைவர்களும்கூட இதை மகிழ்ச்சியாகவே கருதுகிறார்கள். ஏனெனில் இரண்டாம் அலைக்கற்றை ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதே சன் தொலைகாட்சிதான்.

ஊழலற்ற காங்கிரஸ்

மூன்று மதிய அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கயுள்ள போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருத்தருக்கு கூட இதில் பங்கில்லை என்று நினைக்கும் போது இதில் யார் முட்டாள் என்று எனக்கு தெரியவில்லை. தன கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மாட்டிக்கொண்ட பிறகும் காங்கிரஸ் கட்சியை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் திமுக முட்டாளா? இதிலும் மூன்று பேரில் ஒருத்தர் தன்னுடைய மகள். ஒரு பக்கமாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் முட்டாளா? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் முட்டாள்களா? மன்னிக்கவும் நீதிபதிகளை தவறாக எழுதியதற்கு. நன் அப்படி எழுதுவதன் காரணம், ஒரு அமைச்சரவையில் தப்பு நடக்கிறது என்பது அந்த அமைச்சரவையின் தலைவர் பிரதமருக்கு தெரியாதா? அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் அனுமதி இல்லாமல் இரண்டாம் அலைகற்றை வர்த்தகம் நடந்திருக்குமா? இதற்கு பிரதமர் போறுப்பாகமாட்டாரா? காங்கிரஸ் கட்சிகாரர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா?

ஆனால் இன்னும் இரண்டு வாரத்திற்குள் செட்டியார் பொம்மை சிதம்பரம் இந்தவழக்கில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது..

பிழை ஏதேனும் இருப்பின் தொடர்புகொள்க rajkumareco@gmail.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More