Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்

சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.

என் சாவுக்கு கூடும் கூட்டம்....

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.

என் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...! - பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.

நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.

அன்னக்கிளிக்காக மேசையில் தாளம்போட்டுக் காட்டினேன்! - இளையராஜா

அன்னக்கிளி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் மச்சானைப் பார்த்தீங்களா பாட்டுக்கு மேசையில் தாளம் போட்டுக் காட்டினேன். அவர் வாய்ப்புத் தந்தார் எனறார் இளையராஜா.

சஞ்சய், நந்தினி ஜோடியாக நடிக்க சுப்பு சுஜாதா இயக்கிய 'தாண்டவக் கோனே' படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பிரசாத் லேப் தியேட்டரில் இசையை வெளியி்ட்ட பின் அவர் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் பாதியில் கட்டாகிவிட்டது.

உடனே மைக் இல்லாமல் பேச ஆரம்பித்தார் ராஜா. மீண்டும் மைக்கை சரி செய்து அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த ராஜா, மைக் இல்லாமலேயே கணீரென்று பேச ஆரம்பித்துவி்ட்டார்.

அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு பெற்றது எப்படி என அவர் சுவாரஸ்மாக விளக்கினார். அவர் பேசுகையில், "புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன்.

எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட 'மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே' என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார்.

இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம், 'நான் கண்டுபிடிக்காவிட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு,' என்றார்.

இந்த படத்தின் இயக்குநர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. அந்த திறமைக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்," என்றார்.

விழாவில் நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளை விவகாரம்.... அம்மாவுடன் த்ரிஷா மோதல்?

அம்மா - மகள் என்றில்லாமல், தோழிகளைப் போல பார்ட்டி, விழா என அமர்க்களப்படுத்துபவர்கள் நடிகை த்ரிஷாவும் அவர் அம்மா உமாவும். ஆனால் இப்போது இருவரும் கடும் பிணக்கில் உள்ளனராம்.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று நேற்று பரபரப்பாக செய்தி வெளியான நிலையில், அன்று மாலையே அதை மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்த விவரத்தை மீடியாவுக்கு தகவலாகச் சொன்னவர் த்ரிஷாவின் அம்மா உமா. ஆனால் இதனை அடியோடு மறுத்து வருகிறார் த்ரிஷா.

இதற்குக் காரணம் மாப்பிள்ளை யார் என்பதி்ல இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல்தானாம்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று நீண்ட நாட்களாகக் கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்குப் பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம். தனது மனதிலிருப்பதை சமீபத்தில் பேட்டியாகவும் கொடுத்திருந்தார் த்ரிஷா.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில்தான், த்ரிஷாவுக்கு வரன் பார்த்திருப்பதாகவும், மணமகன் சென்னை தொழிலதிபர் என்றும் உமா கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு செய்தியை கசியவிட்டிருந்தார்.

இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த அம்மா - மகள் சண்டையில் அகப்பட்டுக் கொண்டது மீடியாதான்!

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! - என்ன கொடும சார் இது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் "அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.," என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான். இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே. சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான். தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன கொடும சார் இது?

அடுத்த தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் நான்தான் என்ற நிலைமை முடிந்து.. அடுத்த MGR நான்தான் என்று சொல்ல ஆரமித்துவிட்டனர்...

நன் TR இன் ரசிகன் அவரின் பேச்சை விரும்பி கேட்பேன் இது சினிமா... நன் புரட்ட்சிதலைவர் MRG இன் தீவிர வெறியன் வாழ்க்கையில். அவர் செய்த தொண்டுகள் பல...

நான் TR இடம் சில கேள்விகள் கேட்கிறேன்...

சிலம்பரசன் நல்ல நடிகரா? நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்டு சினிமா துறையில் நல்ல நிலையில் இருக்கிறாரா? அல்லது ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து விட்டாரா? இல்லை இருபத்திஐந்து படங்களாவது நடித்து விட்டாரா (கதாநயாகனாக)? இதில் எதுவுமும் இல்லை... உங்கள் மகனை நீங்கள் எப்படிவேண்டுமானாலும் நினைத்து பார்க்கலாம் அது ஒரு தகப்பனின் ஆசை... ஆனால் மக்கள் மத்தியில் நீங்கள் பேசும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? ரஜினி, கமல், விக்ரம் ஆகியோரை பார்த்து திருந்த வேண்டாமா? இது மக்கள் மத்தியில் சிரிப்பையும் வெறுப்பையும் உண்டாக்க கூடிய ஒரு செயல் அல்லவா? சிம்பு என்பவன் யார்? அவன் இப்போது தமிழ் சினிமாவில் எந்த நிலையில் உள்ளார்? பொது வாழ்கையில் எந்த நிலையில் உள்ளார் (குறிப்பாக பெண்கள் மத்தியில்)? இதை உங்கள் மனதிற்குள் நீங்கள் கேட்கவேண்டாம?


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More