மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை - உயர்நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது.


4 comments:

இந்த சுப்ரமனியம்சாமி என்ற அரசியல் மாமா, கம் கோமாளி தண்டணையை நிறுத்தினால் வழ்க்கு போடுவேன், என்று சொல்லியிருந்தானே, அந்த சி.ஐ.ஏ ஏஜெண்டை என்ன செய்யலாம்,தமிழ் மக்களே?

அவன் ஒரு லூசு... நேற்று ஒரு செய்திகள் ஒலிபரப்பு தொலைகாட்சியில் சொல்றான் இதற்காக போராடுபவர்கள் தேச துரோகிகளாம்.. அவனுக்கும் அண்ணன் சுப வீர பாண்டியன் அவர்களுக்கும் பெரிய சண்டையே நடந்தது அந்த ஒளிபரப்பின் பொது...

அவன என்ன பண்ணலாம்னா சுப்ரமணிய சுவாமி சூ ஆப்படிக்கலாம்...

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More