அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு

குன்னூரில் அரசு இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 65 ஆடுகள் மர்மமான முறையில் பலியான குறித்து விசாரனை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வண்டிசோலை கிராமத்தில் விவசாயிகளுக்கு, அரசு இலவச திட்டம் மூலம் ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 65 ஆடுகள் திடீரென மர்மமான முறையில் பலியாகின.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த ஆடுகள் வைரஸ் நோய் தாக்கி பலியானதா, காலநிலை மாற்றத்தால் பலியானதா அல்லது கொடுக்கும்போதே நோய் பாதிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு வழங்கும் இலவச ஆடு மாடுகள் நோய் பாதிக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 65 இலவச ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:

தரமான ஆடுகள் வாங்கப்பட்டுள்ளது ஆனால் காலநிலை மாற்றத்தால் வைரஸ் வியாதி ஏற்பட்டு ஆடுகள் இறந்துள்ளது. அதிக அளவில் பாதிக்கப் பட்டதால் கால்நடை மருத்துவர்கள அரண்டுபோய் இருப்பது உண்மையே!
விரைவில் தீர்வு கிடைக்கும்!! மலை பிரதேசத்திற்கு ஆடுகள் வாங்குபோது மற்றொரு மலை பிரதேசத்திலிருந்து வாங்குவதே நல்லது. இந்த நிகழ்வில் கீழே வாங்கப்பட்டுள்ளது.

"Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc;" அருமையான கருத்து... நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More