பிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories


பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   

இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.

தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.

         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    

என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.

இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.

      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?


Tags: Tamil Friendship Stories, Pisiraanthaiyaar, Kopperum Chozhan, Tamil History Stories, Historical Stories

12,000 கோடி ரூபாய் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது!


செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது.
பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள க்யூரியாசிட்டி அந்த கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கலத்தின் வேகம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியவுடன் அதன் ஈர்ப்பு விசை காரணமாக அதிகரித்தது. இருப்பினும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மிக மிக பத்திரமாக தரையிறக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஐஸ் கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்ப நிலை மைனஸ் 12 செல்சியல் ஆகும்.
கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன.

பன்னி கூட சிங்கிளாக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால் சிங்கம் சிங்கிளாக வர வாய்ப்பில்லை

சிங்கம் மற்றும் புலிகளின் குணாதிசய ஒப்பீடு (பல இணைய தளங்களில் சுட்டது)

சிங்கம் என்றும் தனியாக வேட்டைக்கு போகாது, கூட்டமாகவே செல்லும்.. 
புலி தனியாகவே வேட்டைக்கு செல்ல விரும்பும்

சிங்க குட்டிக்கு மூத்த சிங்கம் ஏதாவது வேட்டையாட சொல்லி கொடுத்தால்தான் வேட்டையாடும்.. 
ஆனால் புலிக்குட்டியை சில நாட்களிலேயே மூத்த புலிகள் தனியாக விட்டுவிடும், வேட்டையாடும் இயல்பு புலிகளுக்கு இயல்பாகவே அமைந்தது

ஆண் சிங்கம் சோம்பேறி, பெண் சிங்கம் வேட்டையாடும் உணவை ஆண் சிங்கம் உண்ணும்,.. 
புலிகளில் புலிக்குட்டி, ஆண் புலி, பெண் புலி என அவைகளுக்கு ஏற்ற உணவை அவைகளே தேடி கொள்ளும்

சிங்கங்கள் தனக்குள்ளே அடித்து கொண்டாலும், வேறு மிருகங்கள் வரும் போது ஒற்றுமையுடன் இருக்கும்.. 
புலிகள் ஒன்றாக இருக்க விரும்புவதில்லை, தனிமையையே பெரும்பாலும் விரும்பும்

சிங்கம் "இடம் சாரா உயிரினம்" என்று அழைக்கப்படும், பல இடங்களில் சென்று அதன் ஆட்சியை செலுத்தும்..
புலி "இடம் சார்ந்த உயிரினம்" என்று அழைக்கப்படும், தான் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் செல்ல விரும்பாது, மற்ற இடங்களில் ஆட்சி செலுத்தவும் விரும்பாது, 

சிங்கங்கள் இறந்த உணவை நெடு நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் உடையது, சிங்கத்திற்கு பசிக்காவிட்டாலும் உணவை வேட்டையாடி சேமித்து வைத்து கொள்ளும்.. 
புலிகளுக்கு பசிக்கும் போது மட்டுமே வேட்டையாடும் எண்ணம வரும், வேட்டையாடிய உணவு மீதமைடைந்தால் அப்படியே விட்டுவிட்டு சென்று விடும், அடுத்த வேளைக்கு வைத்து கொள்ளாது..

சிங்கமும் புலியும் ஒன்று சேர ஒரே இடத்தில் வாழ விரும்பாதவை, இரண்டையும் சேர்ந்து பார்ப்பது மிக மிக அரிது

நாற்பது யானைகள் வந்தாலும் சிங்கம் தனியாக எதிர்த்து நிற்காது, நான்கு நரிகள் வந்தாலே எதிர்க்க தயங்கும்


நன்றி: Agazhvaan GGanesh

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருந்து சோதனை: 12 பேர் பலியானதாக தகவல்!

மனிதர்களை கினியா பன்றிகளைப் போல மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு வந்த ஏழை நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடத்தியதில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மருந்து பரிசோதனை நடத்தப்பட்ட 279 நோயாளிகளில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரின்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

12 பேர் மருந்து அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலியானதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் இலவச சிகிட்சைக்காக மருத்துவமனையில் அபயம் தேடிய அப்பாவி ஏழைகள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுவிற்கு பதிலாக கிடைத்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை மருந்து பரிசோதனைக்கு மருத்துவமனை அதிகாரிகள் உட்படுத்தியதாகவும் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியதாகவும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதியுறும் ராமதர் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மருந்தை தந்தனர். பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் வாசிக்க தெரியவில்லை” என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

தனது கணவரை மருத்துவமனை அதிகாரிகள் தவறான மருந்தை கொடுத்து கொலைச் செய்ததாக போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டு இன்னொரு நபரான சங்கர்லாலில் மனைவி லட்சுமி பாயீ குற்றம் சாட்டுகிறார்.

உயிர்பிழைக்க மாட்டார்கள் என உறுதியான நோயாளிகளிடம் மருத்துவர்கள் மருந்து சோதனை நடத்தியதாகவும், ஒவ்வொரு நோயாளியிடமும் சோதனை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மருந்து கம்பெனிகள் பணம் அளிக்கின்றனர் என சமூக ஆர்வலர் ரசனா தின்கரா கூறுகிறார்.

அதேவேளையில் மருந்து பரிசோதனை குறித்து பல்வேறு ஏஜன்சிகள் மாறுபட்ட புள்ளிவிபரங்களை அளித்துள்ளன. செண்ட்ரல் க்ரேடு ஸ்டாண்டர்டு ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) புள்ளிவிபரப்படி போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரில்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) 7 மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை ஆவணங்களில் 10 சோதனைகள் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது. 13 சோதனைகள் நடத்தப்பட்டதாக மருந்து கம்பெனிகள் அமெரிக்க அரசுக்கு அளித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொத்தம் 3 பரிசோதனைகள் மட்டுமே பி.எம்.ஹெச்.ஆர்.சியில் நடந்ததாக ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா(டி.சி.ஜி.ஐ) கூறுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஹெல்த் ரிசர்ச் பிரிவு செயலாளர் டாக்டர் வி.எம்.கட்டக் தெரிவித்துள்ளார். மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை கினியா பன்றிகளைப் போல உபயோகிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச பா.ஜ.க அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இந்தியாவில் ஏழை மக்களிடம் மருந்து கம்பெனிகள் பெருமளவில் மருந்து பரிசோதனை நடத்துவதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான விசாரணையின் போது ஏழு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு?

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? அதற்கு எவ்வளவு வட்டி? கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? பாக்கி கடன் எவ்வளவு உள்ளது? குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா? வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா? எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

பெங்களூர் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More