அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருந்து சோதனை: 12 பேர் பலியானதாக தகவல்!

மனிதர்களை கினியா பன்றிகளைப் போல மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு வந்த ஏழை நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடத்தியதில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மருந்து பரிசோதனை நடத்தப்பட்ட 279 நோயாளிகளில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரின்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

12 பேர் மருந்து அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலியானதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் இலவச சிகிட்சைக்காக மருத்துவமனையில் அபயம் தேடிய அப்பாவி ஏழைகள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுவிற்கு பதிலாக கிடைத்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை மருந்து பரிசோதனைக்கு மருத்துவமனை அதிகாரிகள் உட்படுத்தியதாகவும் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியதாகவும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதியுறும் ராமதர் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மருந்தை தந்தனர். பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் வாசிக்க தெரியவில்லை” என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

தனது கணவரை மருத்துவமனை அதிகாரிகள் தவறான மருந்தை கொடுத்து கொலைச் செய்ததாக போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டு இன்னொரு நபரான சங்கர்லாலில் மனைவி லட்சுமி பாயீ குற்றம் சாட்டுகிறார்.

உயிர்பிழைக்க மாட்டார்கள் என உறுதியான நோயாளிகளிடம் மருத்துவர்கள் மருந்து சோதனை நடத்தியதாகவும், ஒவ்வொரு நோயாளியிடமும் சோதனை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மருந்து கம்பெனிகள் பணம் அளிக்கின்றனர் என சமூக ஆர்வலர் ரசனா தின்கரா கூறுகிறார்.

அதேவேளையில் மருந்து பரிசோதனை குறித்து பல்வேறு ஏஜன்சிகள் மாறுபட்ட புள்ளிவிபரங்களை அளித்துள்ளன. செண்ட்ரல் க்ரேடு ஸ்டாண்டர்டு ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) புள்ளிவிபரப்படி போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரில்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) 7 மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை ஆவணங்களில் 10 சோதனைகள் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது. 13 சோதனைகள் நடத்தப்பட்டதாக மருந்து கம்பெனிகள் அமெரிக்க அரசுக்கு அளித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொத்தம் 3 பரிசோதனைகள் மட்டுமே பி.எம்.ஹெச்.ஆர்.சியில் நடந்ததாக ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா(டி.சி.ஜி.ஐ) கூறுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஹெல்த் ரிசர்ச் பிரிவு செயலாளர் டாக்டர் வி.எம்.கட்டக் தெரிவித்துள்ளார். மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை கினியா பன்றிகளைப் போல உபயோகிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச பா.ஜ.க அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இந்தியாவில் ஏழை மக்களிடம் மருந்து கம்பெனிகள் பெருமளவில் மருந்து பரிசோதனை நடத்துவதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான விசாரணையின் போது ஏழு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு?

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? அதற்கு எவ்வளவு வட்டி? கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? பாக்கி கடன் எவ்வளவு உள்ளது? குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா? வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா? எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

பெங்களூர் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மாற்றான்... சுட்ட படமா, சுடாத படமா...?


ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.
அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.
அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!
மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.
இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.
.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!

வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை

நமக்குச் சொந்தமான கச்சதீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல், மத்திய அரசு விழிக்கிறது. வல்லரசு கனவு காணும் இந்தியா, தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் பழிக்காதா?


கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாக 75 கோடி அமெரிக்க டொலர்களும் (சுமார் ரூ. 4,125 கோடி), நிதி உதவியாக 35 கோடி அமெரிக்க டொலர்களும் (ரூ. 1,925 கோடி) தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு விலைதான் இந்திய மீனவர்களின் உயிரும், உடைமையுமா? தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?'

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது | Hubble Discovers a Fifth Moon Orbiting Pluto

ஹப்பிள் தொலைநோக்கி ப்ளுடோவின் சுற்றுவட்ட  பாதையில் ஐந்தாவது நிலவை கண்டுபிடித்துள்ளது.

NASA வின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பயன்படுத்தி வானியல் குழு பனிக்கட்டி குள்ள கிரகமான ப்ளூட்டோவை சுற்றிவரும் மற்றொரு நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன்மூலம் ப்ளூட்டோவை சுற்றிவரும் நிலவுகளின் எண்ணிக்கை நாளிலிருந்து ஐந்தாக உயர்ந்திரிக்கிறது.

This image, taken by NASA's Hubble Space Telescope, shows five moons orbiting the distant, icy dwarf planet Pluto. The green circle marks the newly discovered moon, designated P5, as photographed by Hubble's Wide Field Camera 3 on July 7. The observations will help scientists in their planning for the July 2015 flyby of Pluto by NASA's New Horizons spacecraft. P4 was uncovered in Hubble imagery in 2011. (Credit: NASA; ESA; M. Showalter, SETI Institute)
மேலும் விவரங்களுக்கு:  http://www.nasa.gov/mission_pages/hubble/science/new-pluto-moon.html

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More