யாரை இடைநீக்கம் செய்கிறாய் பராசக்தி பாணியில் சீறுகிறார் விஜயகாந்த்!!!

இந்த சட்டசபை விசித்திரம் நிறைந்த பல மனிதர்களை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே சட்டசபை விசித்திரமல்ல, பேச போகும் நான் புதுமையான மனிதனுமல்ல. ஆண்டாள் மண்டபத்திலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

சட்டசபையில் குழப்பம் விளைவித்தேன். அதிமுக உறுபினர்களை தாக்க முயற்சித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. சட்டசபையில் குழப்பம் விளைவித்தேன். சட்டசபை என்பதற்காக அல்ல. சட்டசபை அதிமுக கோமாளிகளின் கூடாரமாய் மாறிவிட கூடாது என்பதற்காக. அதிமுக உறுப்பினர்களை தாக்க முயற்சித்தேன். அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக அல்ல. அந்த நல்லவர்கள் வேஷம் பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, தமிழகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது

தமிழ்நாட்டிலே மதுரையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை! அது உடம்பை வளர்த்தது. என்னை சினிமாகாரனாக ஆக்கியது. மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ என் எதிரிலே உங்கள் முன் அமர்ந்து இருகிராளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். ஆறு மாதம் பேசமுடியாமல் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
இன்று அவையிலே கோபம் வந்தது சீறிவிட்டேன்.
எல்லாவற்றிக்கும் யார் காரணம் நானா காரணம்
இல்லை இல்லை இல்லவேயில்லை,
பால் விலையை உயர்த்துவோம்
பயண கட்டணத்தை உயர்த்துவோம்
இருந்தும் வெற்றிபெறுவோம் என்று
மக்களை முட்டாள்கள் என்றுநினைத்து
சூளுரைத்தாலே ஆணவக்காரி
ஜெயலலிதா அவள்தான் காரணம்!

ஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொழியா ஆகக் கூடாதுங்க!

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் " ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா , ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது , தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட WORDSWORTH யும் SHAKESPHERE யும் சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ? இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும் மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம் " HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES " என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம் ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம் செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்..

இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு.. ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன் !! ஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொழியா ஆகக் கூடாதுங்க !!!!

ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?

துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறுநாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசியின் மருத்துவ குணங்கள்: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

நன்றி @அன்புடன் புஷ்பராஜ்

பழைய சாதத்துல இவ்வளவு விசயமா?



பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.

காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

தமிழரின் கணக்கதிகாரம்......

ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
கூற முடியுமா ?

ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.

அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்


ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்


அடுத்த முறை பூசனி வாங்கும் போது சரிபாருங்கள்.

நன்றி : தோழர் அ.குரு

கலாம் இன்று இலங்கை பயணம்: மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார்

இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்.

திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். அதே போல கொழும்பு, மொரதுவா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.

மேலும் இலங்கை விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது 4 நாள் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை அவர் இந்தியா திரும்புவார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More