இறு‌தி‌ப்போ‌ரி‌ல் மனித உரிமை மீறல் புகார்களை இல‌‌‌ங்கை ஆய்வு செய்ய இந்தியா வற்புறுத்தல்

விடுதலை‌ப் புல‌ிகளு‌க்கு எ‌திரான இறு‌தி க‌ட்ட‌ப் போ‌ரி‌‌ன்போது இல‌ங்கை இராணுவ‌த்‌தின‌ர் நட‌ந்து கொ‌ண்ட ‌ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல் புகா‌ர்களை ‌வி‌ரிவாக ‌ஆ‌ய்வு செ‌ய்யுமாறு அ‌ந்நா‌ட்டை இ‌ந்‌தியா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

டெ‌ல்ல‌ி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மத்திய அயலுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சனையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

இந்தியாவை பொறுத்தவரை, போர்க்குற்றச்சா‌ற்றுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை அயலுறவு அமை‌ச்ச‌ர் டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம். இந்த குற்றச்சா‌ற்றுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் எ‌ன்று விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

இந்தோனேஷியாவில் மவுண்ட் லோகன் எரிமலை வெடிப்பு

இந்தோனேஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக சீறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது. 1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில தினங்களாக சீறிக் கொண்டிருந்தது.

எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு அந்த எரிமலை வெடித்து சிதறியது.

அதிலிருந்து பாறைகள், நெருப்பு குளம்புகள், மணல், புகை, சாம்பல் போன்றவை வெளியேறி, சுமார் 500 மீட்டர் உயரத்துக்கு வானில் பரவியது.

முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இப்பகுதியில் வசித்த 28 ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


உண்ணாநோன்பு மருத்துவம்

- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்

உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும்.
இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.

உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல்
நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.

உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:
இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு! அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணாநோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.

18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார். வளர்-சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.

இருபது -முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில்
உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.

மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்பு
சிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சைமுறையைப் பின்பற்றலாம் என்பதை ர~;ய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் எந்தவித நோயும் இல்லாதிருக்கும் போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவமுறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.

எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம். குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சில நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில் தனிக் கூடங்களில் வைக்கப் படுகின்றனர். நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.

முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர். உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது. அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.

மருத்துவ முறை
உணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது.
ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ்மருத்துவமும் அளிக்கப் படுகிறது. அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர்.

பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை. எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும். மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும் இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.

ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது. இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும். அதன் பின்னர் நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும். அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது. உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும்.
உடல் புனரமைக்கப் படுகிறது.

முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது. இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.

முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.

சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.

உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார். ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.

முடிவுரை
இந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன. முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது. இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது. மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது. நான்கவதாக திசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன. ஜந்தாவதாக
தரப்படுகின்றது. மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியது
செரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும்போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே. இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளினின்றும் விடுபடுகின்றனர்.

- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்
நன்றி: நல்வழி
உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது. பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது. மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும்

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

இன்றும் துடிக்கின்றன...

இன்றும் துடிக்கின்றன...

மலர்ந்த மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...

இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...

மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
உங்கள் அரசுகள்
குழந்தைகளை
எப்போது கொண்டாடும்?

எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை
வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...


8 வருடங்கள் ஆகியும் இந்த வழக்கிற்கு கூட இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை... என்ன ஒரு வெட்கக்கேடு...


கண்ணீருடன்
குழந்தைகளே!!!

இன்றொரு தகவல்! பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது மழை பொழியுமா?

பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது மழை பொழியுமா?
ஆம் பொழியும் ஆனால், நீராக(H2O) அல்ல.

வெள்ளி கிரகத்தில் (Venus Planet) Sulfuric Acid (H2SO4) என்னும் அமிலம் மழையாக பொழிகிறதாம். ஆனால் அது கிரகத்தின் நிலபரப்பை அடைவதற்கு முன்னே ஆவியாகிவிடுகிறது. ஏன் என்றால் அந்த கிரகத்தின் வெப்பநிலை மிகவும் கடுமையானது.

அதேபோல சனி கிரகத்தின் (Planet Saturn) துணை கோளான டைடனில் (Saturn Moon Titan) Hydrocarbon அதாவது ethane மற்றும் ethane வாயுக்கள் திரவமாக மழை பொழிகிறது. தற்போது நாசாவும் கூட திரவநிலையில் டைடனில் பெரிய கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. அங்கு கப்பல் போல் ஒரு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யவும் முயல்கிறது. Titan பற்றி மிகவும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதை தனி கட்டுரையாக பிறகு பார்போம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More