TrES-2b New Planet - ட்ரெஸ் 2 பி புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயரும் சூட்டியுள்ளனர்.

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு 'ட்ரெஸ்-2 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இதுவரை கண்டுபிடித்துளள கிரகங்களிலேயே மிகவும கறுப்பான கிரகம் என்றால் அது இந்த ட்ரெஸ் 2 பி-தான். சூரிய ஒளியில் 1 சதவீதத்தை மட்டுமே இந்த கிரகம் பிரதிபலிக்கிறது. இதனால் நிலக்கரியை விட கறுப்பாக இந்தக் கிரகம் காட்சி தருகிறது.

இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த புதிய கிரகம் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது (ஒரு ஒளி ஆண்டு என்பது 6 ட்ரில்லியன் மைல் தூரம் கொண்டது!)


Kepler Find Big Black Planet - TrES-2b

3 comments:

நல்ல பதிவு மேலும் அண்டத்தை பற்றிய ஆய்வுகளை தொடருங்கள்
வாழ்த்துக்கள்

பயனுள்ளபதிவு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More