ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.

நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.

1 comments:

சினிமா நட்ச்த்திரங்கள் வெளியே வந்து குரல் கொடுக்க வேண்டும். சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர, இதுபோன்ற நல்ல காரியங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டேங்குறார்கள்.
கமலஹாசனின் இந்த உரை முதற்படி. பார்க்கலாம் அடுத்து யார் என்று.

நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More