சைதாப்பேட்டை மாஜி திமுக எம்எல்ஏ சைதை கிட்டு மரணம்

தென் சென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், திமுகவின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சைதை கா. கிட்டு திருச்சியில் மரணமடைந்தார்.


தென் சென்னையில் திமுகவின் பலம் வாய்ந்த தளபதிகளில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் கிட்டு. திமுக தலைவர் கருணாநிதியின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். செயலில் சிட்டு, சைதை கிட்டு என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.

இவர் நான்கு முறை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தென் சென்னையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தேவகோட்டைக்குச் சென்றிருந்த கிட்டு அங்கிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கிட்டுவின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கிட்டுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More