பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளை அழிப்பதை ஓர் இயக்கமாக மேற்கொண்டு அரசு செய்து முடிக்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார்.

பார்த்தீனியம் செடி அழிப்புக் குறித்து ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த விவசாயத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உப்பு நீர் கரைசலைத் தெளித்தால் அச்செடி அழிந்துவிடும் என வேளாண்மைத் துறை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றை அழிக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும் கூறினார்.

"ஒவ்வொரு விவசாயியும் உப்புக் கரைசல் நீரைத் தெளிப்பது சாத்தியமற்றது. பொதுவான நிலத்திலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்திருக்கின்றன. அதன் விதைகள் 2 ஆண்டுகள் வரை இருந்து எந்த சமயத்திலும் முளைக்கக் கூடியவை. பசுமைப் புரட்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு, தன்னார்வ அமைப்புகள் மூலமாகவோ, 100 நாள் வேலைத் திட்டம் மூலமாகவோ பார்த்தீனியம் செடிகளை அழிக்க முன்வந்தால் விவசாயிகளுக்குப் பயன் உள்ளதாக இருக்கும்' என தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், பார்த்தீனியம் செடிகள் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. அவற்றை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அவற்றை அழிக்க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பதில் அளித்த முதல்வர் "இது நல்ல யோசனை. பார்த்தீனியம் செடிகளை அழிப்பதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று அறிவித்தார்.

2001 தேர்தலில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடி ஆன நிலையில், அங்கு வெற்றி பெற்றவர் தங்க தமிழ்செல்வன். பின்னர் வழக்கில் விடுதலை ஆன பிறகு 2002ல் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.

இப்போது ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாறிவிட்டதால் ஆண்டிபட்டியில் போட்டியிட தங்கதமிழ்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

பேரவையில் அவரது முதலாவது கோரிக்கைக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் சாதகமாக பதில் தராவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதா அந்தக் கோரிக்கையை ஏற்று "பார்த்தீனியம் அழிப்பு ஒர் இயக்கமாகவே செயல்படுத்தப்படும்' என அறிவித்துள்ளார்.

2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல் செய்தார் ஜெயலலிதா. அதில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. அதேபோல பார்த்தீனியம் அழிப்பும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி கிராமப்புற மக்கள் அனைவருக்கும் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து விடுதலை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி
Latest Tamil News


பார்த்தீனியம் செடிகளை பற்றி ஒரு விளக்கம் - About Parthenium hysterophorus

பார்த்தீனியம் அல்லது பார்தினியம் என்பது ஒரு குறுஞ்செடியாகும். இவைகளை காரட் க்ராசு (மல்லிக்கிழங்குப்புல்) அல்லது கசார் கச் என விளிக்கின்றனர். இவை செடிகளின் ’நட்சத்திர’ குடும்பமான ஆச்டெரேசியே வகைப் பூந்தாவரமாகும். பார்த்தீனியம் அர்செண்டேடம், பா. இங்கானம் மற்றும் பா. இச்டெரோபோரசு ஆகியன இக்குடும்பத்தில் நன்கு அறியப்பட்ட சிற்றினமாகும். இவை களைகளாய் விளைநிலங்கள், சாலையோரங்களில் செழித்துக் காணப்படுகின்றன.

பண்புகள்

நன்கு (3-4 அடி) வளரக்கூடிய ஆழ்வேர்களைக் கொண்ட பூக்களாள் நிறுவப்பட்ட தாவரமாகும். இவைகளில் நன்கு அறியப்பட்ட பா. இச்டெரோபோரசு நட்சத்திரம் போன்ற வெண்பூக்களால் படரப்பட்ட தாவரமாகும். இவை அந்நியச் செடி (அமெரிக்கா பூர்வீகம்) ஆனால் நம் நாட்டில் இவை களையாக உருவெடுத்துள்ளது. இவை ஐப்பசி-கார்த்திகைகளில் அடர்ந்து வளர்கின்றன. இவ்வாறு வளரும் போது இவை பூந்தாதுக்களை அதிகமாய் உற்பத்தி செய்து காற்றில் பரவவிடுகின்றன. ஆதலால் இவை பேருயிர்களின் சுவாசக் குழலுக்குள் சென்று ஒவ்வாமையை ஊக்குவிக்கின்றன.

பயன்கள்

இவைகளில் பா. அர்செண்டம் அமெரிக்க நாடுகளில் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வட அமெரிக்காவைச் சேர்ந்த சிகரில்லா அபச்சி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தீமைகள

இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். காரணம். அந்நிய நாட்டில் எந்தவொரு தாவரமும் களைதான். உதாரணம் ஆசுதிரேலியாவில் 70% அதிகமாக அந்நிய செடிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதைத் தடுக்க அந்நாடு வெளிநாடுகளிலிருந்து செடிகளை இறக்குவதில் தடை விதித்துள்ளது. அதேபோல் இத்தாவரமும் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இவை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோலாறுகளையும் ஒவ்வாவையும் ஏற்படுத்துகின்றன.

நோய்கள்

இவை சருமநோயான சருமவழல், சொறி/கரப்பான் நோயை உண்டாக்குகின்றன - பா. இச்டெரோபோரசு. இவை ஆச்துமா என அறியப்படும் ஈளநோய்/ஈழைநோயையும்; குருதிசெவ்வனு நலிவு (ஈசினோபீலியா) எனப்படும் நோயை உண்டாக்குகிறது. இதனால் வகை 1 மிகையுணர்வூக்கம் தோற்றத்திற்கும் வழிகோறுகிறது.

காரணங்கள்

சூழ்நிலை மாற்றம் பயிர்களை எதிர்த்து வளரத்தூண்டுகிறது. இவைகளுக்கு இயற்கையாகவே கட்டுப்படுத்துவதற்கு இயற்கையெதிரி ஒன்று இயங்கி வரும் ஆனால் அவை இங்கு காணப்படாததால் தடையின்றி வளர்ச்சி. விழிப்புணர்ச்சி இன்மையால் மனிதன் இதுபோல் கொண்டு வந்த தாவரங்கள் சில வெங்காயத்தாமரை, முட்செடி ஆகியன.

அழிக்க வேண்டியதன் நோக்கம் மற்றும் முறைகள் சில

இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில் இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெறிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வினமே அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. இவைகளை அழிக்கச் செடிகளைப் பிடுங்கிப் பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு குழிகளை மூடுவதன் மூலம் இக்களைகளை நாமழிக்கமுடியும்.

ஒரேயடியாக அழிப்பதென்பது சாத்தியமில்லா ஒன்று ஆகையால் இவைகளை தழைச்சத்தாக பயிர்களுக்கு இடுவதன் மூலமும் இவைகளைக் கட்டுப்படுத்தமுடியும்.


About Parthenium hysterophorus

2 comments:

ஆவாரம் பூ செடி பார்த்தீனியத்திற்கு ஒரு எதிர் உயிரி. இந்தசெடி இருக்கும் இடத்தில் பார்த்தீனியம் இருக்காது. எங்கள் ஆசிரியர் காசிராஜன்( விருதுநகர் பாலிடெக்னிக் ஆசிரியர், தேனிக்காரர் ) இது தொடர்பாக பல ஆரய்ச்சிகள் செய்திருக்கிறார். அவரது என் சி சி பயிற்சியில் எங்களுக்கு ஆவாரம் விதைகளை விதைப்பது முக்கிய பணி.

மிக மோசமான தாவரமிது எங்க ஊர்ல இத விஷப்பூடுன்னு சொல்லுவோம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More