நண்பனில் விஜய்யுடன் இணையும் லாரன்ஸ்?

விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக் நண்பனில் புதிதாக இணைகிறார் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குநர் என்பதைத் தாண்டி, நடிகராக பெரிய அங்கீகாரம் கிடைக்காதவராக இருந்தவர் லாரன்ஸ். ஆனால் முன் -2 அவரது கேரியரையே புரட்டிப் போட்டுவிட்டது.

இன்று தமிழ் சினிமாவில் அதிக தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகர் கம் இயக்குநர் லாரன்ஸ்தான். 'ஹீரோவாக நடிங்க, இல்லன்னா நடிச்சு இயக்குங்க... எப்படியோ நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணா போதும்' என ராகவா லாரன்ஸிடம் நச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்கள் நிறைய.

ஆனால் லாரன்ஸ் மிகக் கவனமாக புதிய படங்களைத் தேர்வு செய்து வருகிறார். முனி - 3 தொடரும் என படத்தில் போட்டிருந்தாலும், இப்போதைக்கு வேறு சில படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் செய்த பிறகே முனி 3-ம் பாகத்தை இயக்கப் போகிறாராம்.

இதற்கிடையே, நண்பன் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்குமாறு லாரன்ஸை கேட்டுக் கொண்டாராம் இயக்குநர் ஷங்கர். இந்த வாய்ப்புக்கு மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்ட லாரன்ஸ், விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்.

லாரன்ஸும் விஜய்யும் திருமலை படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நண்பனில் ஏற்கெனவே எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More