வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!

மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிடியை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More