பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம் அதை சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவும் விளங்கினான். ஆனால்...

அவனுக்கு பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும் மூடர்களாகவும் இருந்தார்கள்.

இப்படி இருந்தால் எப்படி? நமக்கு பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன? என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது.

கல்வியும் தர்மகுணமும் இல்லாத பிள்ளைகள் இருந்தாவதென்ன?

'பால் கெடாத எருமைகளைக் காப்பாற்றினால் அவைகளால் பலனுண்டா?'

பிள்ளை என்று பிறந்தால் இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு அவர்கள் என்ன தவம் செய்தார்களோ என்றெல்லவா பிறர் போற்றும்படி இருக்க வேண்டும். நமக்கோ சுதிகேட்ட இசைபோல் மதிகெட்ட பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களே.
- என்றெல்லாம் அவன் மனம் வருந்து பெருமூச்சி விட்டது.

பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடயே 'எண்ணிக்கைக்குப் பலவாகப் பிறந்துள்ள என் பிள்ளைகள் அறிவிலிகளாக இருக்கிறார்கள். இந்த ராஜ்ஜியத்தின் எதிகாலத்துக்குரியவர்களாகிய அவர்களை இங்கே வந்திருக்கும் உங்களில் யாராவது நீதிசாஸ்திர உபதேசத்தால் மறுபிறவி பெற்ற அறிவாளிகளாக்க முடியுமா?' என்று மனம் வருந்திய நிலையில் கேட்டான்.

வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாஸ்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார்.

2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More