ஒரு தாயின் பாசத்தை பார்த்திருப்பீர்கள்... இங்கு ஒரு குழந்தையின் பாசத்தை பாருங்கள்!
ஒரு யானை (தாய் யானை) தன் குட்டியுடன் தன் தாகத்தை தணிப்பதற்காக ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறது.. அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு முதலை அந்த யானையின் தும்பிக்கையை கடிக்கிறது... அதை கண்ட குட்டியானை துடிக்கிறது
அந்த யானை தன்முழுபலதுடன் அந்த முதலையை அந்த குளத்தில் இருந்து தரைக்கு இழுக்கிறது.
தரைக்கு இழுத்தவுடன் அந்த குட்டியானை தன் தாயை தாக்கிய அந்த முதலைமேல் விழுந்து அமுக்குகிறது. அந்த குட்டியானை அந்த முதலையின் மேல் விழுந்தவுடன் அந்த முதலை தன் வாயில் கவ்வி இருந்த தாய் யானையின் தும்பிக்கையை விடுவிக்கிறது,,,,
என்னே அந்த குட்டியானையின் பாசம்! தவிப்பு! ஆத்திரம்! இவை அனைத்தையும் இந்த படங்கள் உணர்த்துகிறது... மெய்சிலிர்கிறது.....
8 comments:
உண்மையில் மெய் சிலிர்க்கும் விஷயம்தான்.பகிர்வுக்கு நன்றி
ஊக்குவித்ததற்கு நன்றி சண்முகவேல் அவர்களே!
படங்களை பார்க்கும் பொழுதே பாசம் தெரிகிறது நண்பரே. மனிதர்களிடம் கூட இப்பிடி பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. பகிர்வுக்கு நன்றி நண்பரே
அருமையான பகிர்வு..இதே போன்று ஒரே நேரத்தில் முதலை மற்றும் சிங்கத்திடம் மாட்டிய ஒரு மாட்டின் கன்றும் மாடுகள் கூட்டத்தைக் கூட்டி வந்து போராடும் வீடியோ ஒன்று யூடியூபில் உண்டு..அதுவும் அழகு.
நல்ல பகிர்வு..பகிர்வுக்கு நன்றி!
கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்திய அத்துனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...
தயவுசெய்து ஓட்டு போடுங்கள்
http://ta.indli.com/site/tamilpadaipugal.blogspot.com
நண்பரே தங்களது பதிவு அருமை உஜிலாதேவியில் தங்களின் பதிவுக்கான இணைப்பு கிடைத்தது
பாசம் மிக்க அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
Post a Comment