நண்பர்களே தினம் ஒரு பஞ்ச தந்திர கதை எழுதலாம் என்று இருக்கிறேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். முதலில் முன்னுரையுடன் துவங்குவோம். இக்கதைகள் மிகவும் பழங்கால வரலாறு கொண்டவை என்றாலும் இப்பொழுதும் சுவை தருவதும், பயன் அளிக்க வல்லதும் ஆகும். இக்கதைகள் சொல்லும் நீதி ஒரு அரசன் அரசு நடத்த தேவையான அனைத்து வழிகளையும் தருகிறது. மொத்தம் (86) கதைகள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு ஒரே கதையாக அமைகிறது. நான் மிகவும் சிறிய கதைகளை மட்டுமே இங்கு எழுத போகிறேன். இதில் மொத்தம் ஐந்து தந்திரங்களை மையமாக கொண்டு கதை சொல்லப் பட்டுள்ளது. அவை பின் வருமாறு;
- மித்திர பேதம் -நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
- சுகிர்லாப தந்திரம் -தங்களுக்கு இணை ஆனவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்வது
- சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
- லப்தகாணி (அர்த்த நாசம்) -கையில் கிடைத்ததை அழித்தல்
- அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.
0 comments:
Post a Comment