விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அடலாண்டிஸ் கமாண்டர் கிரஸ் பெர்குசன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின.முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதுவரை விண்வெளி வீரர்களும் - செயற்கைக்கோள்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டனர். விண்வெளி ஓடத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.
கல்பனா சாவ்லா
இதுவரை விண்வெளி ஓடங்கள் மூலமாக 135 விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் விண்வெளியில் இரண்டு விண்வெளி ஓடங்கள் வெடித்துச் சிதறியதால், இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
அன்றுமுதல் இந்தியாயவின் வீரமங்கைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் விஞ்ஞான வீர மங்கை கல்பனா சாவ்லா
மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட 5 விண்வெளி ஓடங்களில் மற்ற இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. அட்லாண்டிஸ் விண்கலமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மேலும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் 4 ஆயிரம் ஊழியர்கள் பதவியிழப்பார்கள்.
அதேநேரம் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடாது என்று நாசா உறுதி கூறுகிறது.
ஆனால் அமெரிக்காவில் தனியார் துறையினரால் செய்யப்படும் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் வரை ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறும்.
0 comments:
Post a Comment