இக்கால இலக்கிய வகைகளுள் மிக முக்கியமானவை இரண்டு; ஒன்று நாவல், மற்றொன்று சிறுகதை. இவ்விருவகை இலக்கியங்களும் ஐரோப்பியர் வருகையால் நகக்குக் கிட்டியவை எனலாம். இரண்டாவதான சிறுகதை இலக்கியம் தனது செம்மாந்த பயணத்தை வ.வே.சு. ஐயரில் தொடங்கியது எனலாம். இதன் உயர்ந்தபட்ச வளர்ச்சியில் புதுமைப்பித்தனுக்கு மிக முக்கிய இடமுண்டு. அவர் தமிழ் சிறுகதையின் 'மன்னன்' என அழைக்கப் பெறுகிறார். அவருடைய கதைகளில் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளும் எடுத்துப் பேசப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புது அனுபவத்தைக் கொடுக்கும் கதைகளாகும். எளிய நடை, திரண்ட கருத்து என அவரது சிறுகதைகள் அனைத்துமே சிறப்பு மிக்கவை. நாம் அனைவரும் புதுமைபித்தனின் கதைகளை படித்துப் பயன்பெற வேண்டும். அதன் தொடக்கமாக 'பால்வண்ணம் பிள்ளை' என்னும் ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பால்வண்ணம் பிள்ளை
பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வழக்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும் அதன் இயக்கமே அதட்டுதலும் பயமுமாகவும் அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும் அதனால் ஏற்படும் பணிவும் வாழ்கையின் சாரம். அதட்டல் அதன் விதி விலக்கு.
பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நன்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பலவண்ணம் பிள்ளையை பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, அம்மாதிரியான குணங்களை எல்லாம் படை வீரனிடமும் சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்குனங்களாக கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள். (அதாவது முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் ஒரு குணம்)
பால்வண்ணம் பிள்ளை ஆபீசில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். ஆபீசில் இருந்து வரும்பொழுது ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் உதடுகள் துடித்தன. முக்கியமாக மேல் உதடு துடித்தது. காரணம், ஆபீசில் பக்கத்து குமச்தாவுடன் ஒரு சில பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிறது என்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரி கூறுகிறது என்றார். பால்வண்ணம் பிள்ளை தனது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாய் வீடிற்கு வருகிறார்.
தொடரும்.........
நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com
வலைப்பூ நண்பர்கள் குழுவில் இணைந்த நண்பர்கள் விஜயராஜா, ராஜ்குமார் சாரதி, அருண் சேவியர், பார்த்த சாரதி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்தும் வகையில் என்னுடைய "தலைவலி தீர பத்து ஆலோசனைகள்" என்னும் பதிப்புக்கு கருது தெரிவித்த நண்பருக்கு நன்றி..
0 comments:
Post a Comment