மலர்ந்த மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...
இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...
மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
உங்கள் அரசுகள்
குழந்தைகளை
எப்போது கொண்டாடும்?
எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை
வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...
கண்ணீருடன்
குழந்தைகளே!!!
13 comments:
வேதனை தான்..இதயத்தின் வலி உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது...ராஜ்குமார்..
வலி மிகுந்த வரிகள்....
சொற்களில் தெறிக்கும் வேதனை...
வலியை அற்புதமாய் வெளிப்படுத்தும் கவிதை சகோதரா....
கூதற்காற்று
கருத்துப் பெட்டியில் Word verification ஐ எடுத்துவிடுங்கள் நண்பா... அப்போதுதான் கருத்துரை வழங்க இலகுவாக இருக்கும்
உங்கள கருத்துக்கு நன்றி "Word Verification" எடுத்துவிட்டேன்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...
அருமையான படைப்பு..
தோழரே நாங்களும் உங்களோடு இணைந்தோம்..
இணைந்து வாருங்கள் .
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஒரு வேண்டுகோள்,
SUBSCRIPTION VIA EMAIL என்ற OPTION ஐ ஏற்படுத்துங்கள்
நண்பரே..
அது மிகவும் பயன்தரும்.. ஞாபகமாக நமது தளத்திற்கு
பிறரை வரவழைக்கும்.
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அருமையான கவிதை. வலியையும் வேதனையையும் நன்கு பிரதிபலிக்கிறது. படமோ மனதை பாடாய் படுத்துகிறது. உம் கவிதை பணி தொடர வாழ்த்துக்கள் !
யாழினி
http://yazhinidhu.blogspot.com
அரசியல்வாதிகளின் பாராமுகத்தினால், இன்று வரை இழுத்தடிக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் கொலை தொடர்பான வழக்கினையும், வலிகளோடு கலந்த அவர்களின் நினைவுகளையும் உங்கள் கவிதை சொல்லி நிற்கிறது.
வலியின் வேதனை கவிதையில் தெரிகிறது...
நல்லாய் இருக்கு நண்பரே .... நியாயம் கிடைக்கும் ஒருநாள் ...
இத்தனை நாளாகியும் நியாயம் கிடைப்பது இழுத்தடிக்கப்படுவதும்கூட ஒரு அநீதிதானே..
oh.. shit...
http://puthiyaulakam.com
True Pain always needs reply...........
Post a Comment