தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்
அன்பு நிறைந்த தமிழ்ப் பெருமக்களே,
வணக்கம்.
சிங்கள இனவாத அரசினால் 2009 மே 18ல் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது. சோழ மாமன்னனான இராசஇராசன் தஞ்சையில் எழுப்பிய மாபெரும் கற்கோயிலுக்கு அடுத்தபடியாக, ஈழ விடுதலைக்காக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்களின் நினைவாகவும், தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது.
இவ் வரலாற்றுப் பணியின் சிற்ப வேலையில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகின்றார்கள். அந்தவகையில் நாம் அனைத்துலக தமிழ் உறவுகளின் அன்பளிப்புக்களையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
இந்த வரலாற்றுப் பணிக்கு நாம் இதுவரை பகிரங்கமாக உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தபோதும் எமக்கான இணையவங்கிக்கணக்கை (Paypal) நாம் அறிவிக்கவில்லை. இத்திட்டத்துக்கென எமது அனுமதியோ ஒத்துழைப்போ இன்றி ஒரு தமிழ் இணையத்தளம் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான நடவடிக்கைக்கு மக்கள் துணைபோக வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒழுங்கான முறையில் எம்மால் இணையகணக்கிலக்கம் (Paypal) திறக்கப்பட்டு உலகத்தமிழ் உறவுகளுக்கு முதன் முறையாக தமிழ் தேசிய ஊடகங்களான தென்செய்தி, ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com), தமிழ்க்கதிர், ஆகியவற்றின் ஊடாக அறியத்தருகின்றோம்.
இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது, வேண்டுகிறது.
அன்புள்ள
(பழ. நெடுமாறன்)
தலைவர்
தொடர்புகளுக்கு:
பழ. நெடுமாறன்
தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு
58, மூன்றாவது முதன்மைச்சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை 600 087
தொலைபேசி: 23775536
தொலைநகலி: 23775537
உலகத்தமிழ் உறவுகளுக்கு:
00 33 661 354 878 (பிரான்சு)
நன்றி
அறிக்கையை கீழே அழுத்திப்பெற்றுக்கொள்ளவும்
http://www.sangathie.com/uploads/images/2011/07/WTC-LH-TAMIL-2011.pdf
0 comments:
Post a Comment