இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு?


கும்பலே இல்லாத கூடங்குளம்-இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு? ஏன் கிராமம் கிராமமாக, வீடு வீடாக தேடுதல் வேட்டை? பதுங்கி இருக்கும் ஒசாமா பின் லேடனைத் தேடுவது போல ஒரு அதிபயங்கரச் சூழல் ஏன் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

எதேச்சாதிகார அராஜக அரசியல் நடக்கிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதை பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இதை எதிர்க்க வேண்டும். மக்களாட்சி மரபுகளை மதிப்பவர்கள் போலீஸ் முற்றுகையை அகற்றக் கோர வேண்டும். மக்கள் நலத்தில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் இதை வன்மையாக எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More