இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்.
திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். அதே போல கொழும்பு, மொரதுவா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.
மேலும் இலங்கை விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது 4 நாள் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை அவர் இந்தியா திரும்புவார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.
கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.
சரி இதற்க்கு முன்னாள் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.
இதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.
விஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது.
எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.
முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.
கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.
மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும் இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.
2.மேற்கத்திய பசிபிக்கில் வறட்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.
3.கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் எக்குவடோர் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.
4.உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்ச்சி பகுதிகளில் ஏற்படுகிறது.
எல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும். இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும். இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில் எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.
லா நினாவின் விளக்கம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்
சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தில் நடந்த பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 பெண்களிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த என்ஜினியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அமைந்தகரையில் உள்ளது ஸ்கைவாக் வணிக வளாகம். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக 3வது மாடியில் நடத்தப்படும் பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
நேற்று முன்தினம் இரவு 2 திருமணமான பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களது கணவன்மார்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். இருட்டறைக்குள் அந்த பெண்களிடம் 2 வாலிபர்கள் செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளனர். உடனே அவர்கள் அலறியடித்துக் கொண்டு இருட்டறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். சில்மிஷ வாலிபர்களுக்கு அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (25), ஹாரீஸ் (30) என்பது தெரிய வந்தது. அதில் சுரேந்திரன் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். அவர்கள் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர்.
அவர்கள் 2 பேரையும் மன்னித்து விட்டுவிடுமாறு அந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு போலீசார், வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் சமாதானமாகப் போகங்கள், தற்போது நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்றனர்.
கேரள அரசின் போக்கைக் கண்டித்து இன்று கேரளாவுக்குச் செல்லும் மலைப் பாதைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மாநிலத்திற்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். கட்சி சார்பின்றி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் லோயர்கேம்ப் பகுதியில் இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோரும், கம்பம் மெட்டுவில் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன், போடி மெட்டுவில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ., முருகன்ஜி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.