இந்தியாவிலிருந்து சுமார் ரூ. 20.92 லட்சம் கோடி சுருட்டப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்தது.
கருப்புப் பணம், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்தை முறியடித்துவிட்ட நிலையில் இன்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம்,
வாஷிங்டனைச் சேர்ந்த Global Financial Integrity அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலிருந்து சுமார் 462 பில்லியன் டாலர் பணம், அதாவது ரூ. 20.92 லட்சம் கோடி வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1948ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 213 பில்லியன் டாலர்களை இந்தியா இழந்துள்ளது.
0 comments:
Post a Comment