கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் மூன்று முறை மாநிங்கலவை உறுப்பினர் பதவி வகித்தவர் , இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினர் பதவி வகித்தவர் . இதுவரை இவர் தொட்டுப்பேசாத, போராடாத மக்கள் பிரச்சனைகளே இல்லை எனலாம் . இத்தனை வருட பொதுவாழ்க்கையில் ஒருமுறை கூட ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகதவர் .
ஆட்சியில் இருந்தால் நரம்பு புடைக்க திராணி பற்றி பேசுகிற தலைவர்கள் , ஆட்சியில் இல்லாத போது மலைவாசஸ்தலத்தில் ஓய்வில் இருப்பார்கள் . ஆட்சியில் இருந்தால் தன் பதவி தன் பிள்ளைகள் பதவி தன் பேரன்மார்களின் தொழில் வளர்ச்சி என்றிருக்கிறவர்கள் , ஆட்சியில் இல்லாத போது திராவிடம் ஆரியத்தின் அட்டகாசம் , தமிழினம் ஈழத்துயரம் என்றெல்லாம் நாடகம் ஆடுவார்கள் .
ஆளுங்ககட்சியின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் , எந்த அதிகாரத்திலும் இல்லாத போதும் , வருடக்கணக்கில் மக்கள் பிரச்சனைக்காக சிறையில் இருந்தாலும் எப்போதும் மக்களை அவர் தம் வாழ்க்கையை , நலனை பற்றியே சிந்திக்கிற தலைவன் வைகோ ஒருவர் தான் .
கடந்த சட்டமன்றதேர்தலில் நிதானமில்லாத ஒரு கட்சிக்காக காத்திருந்து கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தார் ஒருவர் . இன்னொருவரோ , எப்படியும் காங்கிரசை தக்கவைக்க வேண்டி குட்டிகரணம் போட்டுகொண்டிருந்தார் இன்னொரு தலைவர் . எல்லோரும் கடந்த சட்டமன்றதேர்தலில் கூட்டணி பேசுவதில் மும்முரமாக இருந்த போது , வைகோ ஒருவன் தான் மன்மோஹனை சந்தித்து "புகிஷிமா போல இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியா அதை எப்படி சமாளிக்க போகிறது . இந்தியமக்களின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் " என்று மன்றாடினார் .
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் என்ன என்ன வாங்கினார்களோ , வாய் மூடி கிடந்தார்கள் தமிழின தலைவர்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் சலசலப்பிற்கு அஞ்சாதவனாக தொடர்ந்து அந்த ஆலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராடினார் . தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிராத போதும் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து கண்ணீர் வடித்து அவர்களுக்காக சர்வதேச சமூகத்திடம் மன்றாடிகொண்டிருக்கிறார் .
முல்லைபெரியாறு பிரச்சனையில் கூட " உன் ஆட்சிகாலத்தில் தான் பிரச்சனை தீர்க்கப்படவில்லை , இல்லை இல்லை உன் ஆட்சியில் பிரச்சனை சிக்கலானது " என மாறி மாறி புள்ளிவிவரங்களோடு கீழ்த்தரமான அரசியல் செய்தார்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக போராடினான் .
இப்படி போராடி போராடி போராடி , இன்னும் போராட முனைப்போடு இருக்கிற தலைவன் வைகோ ....
ஆனால் இந்த மக்களை பாருங்கள் ...தொடர்ந்து ஊழலை ஒரு பொது புத்தி ஆக்கியவனை அங்கீகரிக்கிறார்கள் . சினிமாவில் வசனம் எழுதியதை தவிர வேறொரு தொழிலும் செய்யாமல் முதல்வர் பதவியை தொழிலாக செய்தவர்களை அங்கீகரிக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி கோடிகணக்கில் சொத்து வந்தது ?. உங்கள் மருமகன் உங்களோடு சுற்றிகொண்டிருந்தவராயிற்றே அவர் பிள்ளைகள் எப்படி இன்று இந்தியாவின் குறிப்பிடும்படியான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் , உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு எப்படி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்க முடிகிறது ..? என்றெல்லாம் கேள்வி கேட்க மக்களுக்கு வாய் வருவதே இல்லை . ஓட்டுப்போடும் போதும் அதை எல்லாம் நினைவில் கொள்வதில்லை .
வந்த உடன் பேருந்து கட்டணத்தை ஏற்றியபோது கேவலமாக திட்டியவர்கள் , பால் விலையை கூட ஏற்றினால் என்ன செய்வது என்று அங்கலாய்த்தவர்கள் , நூலகத்தின் மீது கூடவா காழ்ப்புணர்ச்சி காட்ட வேண்டும் ? என்றெல்லாம் பொருமித்தள்ளியவர்கள் கூட இன்று சங்கரன்கோயிலில் ஓட்டுபோடும் போது அவர்களால் சீர்தூக்கி பார்க்க , நினைத்து பார்க்க முடியவில்லை .
தன் குடும்பத்தை அரசியலில் நுழைக்கத்தெரியாத, தனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து கட்டாயம் ஏற்றுகொள்ள வேண்டும் என்று வாஜ்பாய் வற்புறுத்திய போது கூட , அதை தன் கட்சி சகாக்களுக்கு விட்டுகொடுத்த, தன் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக இருந்த போதும் தன் மனைவியை விட்டு நீராராடியாவோடு பேரம் பேச தெரியாத காரணத்தால் , தமிழ் நாட்டின் எல்லா திசைகளிலும் சொத்து வாங்கி குவிக்க தெரியாத காரணத்தால் , ஒழுக்க நெறியோடு ஒரே மனைவியோடு வாழ்கிற காரணத்தால் தான், மக்கள் வைகோவை தகுதியில்லாத அரசியல் தலைவர் என கருதுகிறார்களா ?
ஓய்வென்பதயே அறியாமல் புயலை போலவே சுற்றித்திரிகிற வைகோ , "அரசியலில் நேர்மை , பொதுவாழ்வில் தூய்மை , லட்சியத்தில் உறுதி " என்று தன் கட்சியின் கொள்கையாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அதன்படி செயல்பட்டுகொண்டிருக்கிற வைகோவை நீங்கள் ஆதரிக்க தயங்குகிரீர்கள் என்றால் நாம் வைகோவை ஏமாற்ற வில்லை , நாம் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம் என்று பொருள் .
வைகோ நல்ல மனிதர் தான் , ஆனால் அவரால் நல்ல இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க தெரியவில்லை என்ற சிலரின் குற்றச்சாட்டு எனக்கு நகைப்பை தருகிறது .நீங்கள் யாரை இரண்டாம் கட்டத்தலைவர் என்று சொல்கிறீர்கள் ? தன் தலைவர் மூணு கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே முதுகு வளைந்து தரையில் விழுந்து கும்பிடுபவர்கலையா ? தன் தலைவனை போலவே ஒன்று இரண்டு மூன்று என கூட்டிகொள்கிரவனையா ? ஊருக்கு ஒரு பொறியியல் கல்லூரி , வெளிமாநிலங்களில் முதலீடு , கடற்கரை மாளிகைகளை தன் தலைவனை போல சம்பாதித்து கொண்டவர்களை தான் நீங்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொன்னால் , நிச்சயம் வைகோவால் அப்படிப்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க முடியாது .
Thanks for Content: Udayakumar Facebook
very good article.!!!he is the best among non-tamil speaking tamil leaders
ReplyDeleteNice Article about a true leader... thanks for posting such a article....
ReplyDelete