ஜப்பானின் புகுஷிமா அணுஉலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணுசக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘அணு’வை நினைத்து பயப்பட த்தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும் ‘கிலி’ குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி தெரிந்து கொள்வோமா?
யுரேனியம் ஒரு வித்தியாசமான தனிமம். இதில் இருந்து வெளி யேறும் ஒளிக்கதிர்கள் மனித குலத்துக்குப் பயனளிக்கின்றன; அச்சுறுத்தவும் செய்கின்றன. யுரேனியத்தை 1789ல் மார்ட்டின் ஹெய்ன்ரிச் க்ளாப்ரோத் என்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். தின்ம நிலையில்தான் இதைக் கண்டுபிடித்தார் அவர். அதற்கு அவர் முதலில் சூட்டிய பெயர் ‘யுரேனிட்’. ஓராண்டுக்குப் பிறகு ‘யுரேனஸ்’ கோளின் நினைவாக ‘யுரேனியம்’ என்று பெயர் சூட்டினார். முதல் இதில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை இவர் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நூறாண்டு கழித்து பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பெக்யூரல் என்பவர் யுரேனியத்தில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
யுரேனியம் ஒளிவீசும் வெண்மை நிறம் கொண்ட தனிமம். காற்று மண்டலத்தின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது. தனிமங்களிலேயே இது அதிகக் கனமானது. ஒரு கன அடி யுரேனியம் 500 கிலோ எடை இருக்கும். ஆரம்ப காலத்தில் பட்டுத் துணிகளுக்குச் சாயம் ஏற்றவும், பீங்கான் பாத்திரங்களுக்கு வண்ணம் தீட்டவுமே இது பயன்படுத்தப்பட்டது. இன்று இதன் பயனும் பயமும் அளவிட முடியாதது!
யுரேனிய அணுக் கருவிலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஒளிக்கதிர்கள் மனிதகுலத்திற்கு மிகவும் பயன் அளிக்கின்றன. விவசாயம், தொழில், உயிரியல், மருத் துவம் போன்ற துறைகளில் அதிகளவில் இக்கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுரேனி யத்தை அழிவுக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபணமானது 1938ல்தான். அப்போது யுரேனியத்தை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்த இத்தாலியின் என்ரிக்கோ ஃபர்மி தலைமையிலான குழு, அணுக்கருவை நியூட்ரானுடன் சேர்த்து வெடிக்கச் செய்தபோது அணுக்கரு பிளவைக் கண்டுபிடித் தனர்.
இப்படி நியூட்ரான் வெடிப் பதால் யுரேனியம் அணுக்கரு இரு பகுதிகளாகப் பிளந்து விடுகிறது. இந்த அணுப்பிளவு பிரமாண்டமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அணுப் பிளவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அணுகுண்டு தான் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் வீசப்பட்டது. ஒரு நொடிப்பொழுதில் அந்நகரமே மண்ணோடு மண்ணானது. இதன் பின்புதான் யுரேனியத்தின் மதிப்பு உலக நாடுகளிடையே அதிகமாக உற்றுநோக்கப்பட்டது.
இப்போது அணுவை ஆக்கத் திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளும் அணு மின்சார உற்பத்திக்காக அணுக்கருப் பிளவை பயன்படுத்துகின்றன. 30 லட்சம் பவுண்டு நிலக்கரியை எரிப்பதால் எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அது ஒரே ஒரு பவுண்ட் யுரேனியத்தில் இருந்து கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அணுஉலைகளில் மின் உற்பத்திக்காக யுரேனியம் பயன்படுத்தப்படுகின்றது!
நன்றி: தினகரன்
அன்புடன்
பாபு நடேசன்
No comments:
Post a Comment