கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.
4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.
எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Pregnancy Calculator Week by Week blog provides about Signs and Symptoms of Early Pregnancy, Tips for healthy pregnancy, Monthly pregnancy and A2Z about pregnancy. For More Information Visit http://pregnancycalculator-a2z.blogspot.com/
No comments:
Post a Comment