இணையதளங்களை தவறாக பயன்படுத்தும் சிறுவர்கள்!


உலக அளவில் இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இன்றி இப்போது அனைவரும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே.
ஆனால் எந்த அளவிற்கு இணைய தளத்தின் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு இணைய தளத்தைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சிறுவர்கள் இணைய தளத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியும் வருகிறது. அதிலும் குறிப்பாக 8 முதல் 17 வயதிற்குட்பட்ட 53 சதவீத இந்திய சிறுவர்கள் இணைய தளத்தைத் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துகின்றனர் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இந்தியா உள்பட 25 நாடுகளைச் சேர்ந்த 8 முதல் 17 வயதிற்குட்பட 7600 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட குளோபல் யூத் ஆன்லைன் பிகேவியர் சர்வே என்ற இந்த ஆய்வில் இந்தி பகீர் தகவல் வந்திருக்கிறது.
இணைய தளத்தில் சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு மரியாதை கொடுக்கின்றனர் மற்றும் இணைய தளத்தை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் போது அதைப் பெற்றோர்கள் எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்று ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இணைய தளத்தில் சிறுவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது அனைவருடைய கடமையாகும். குறிப்பாக பெற்றோர், ஆசியரியர்கள், கல்வியாளர்கள், பயற்சியாளர்கள், அரசாங்கம் மற்றும் குழந்தைகள் போன்றோர் குழந்தைகளை சரியான முறையில் இணைய தளத்தைப் பயன்படுத்த பழக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட்டின் இயக்குனர் ஜாக்குலின் பயக்கீர் கூறுகிறார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More