வைகோ, நெடுமாறன் தலைமையில் இன்று கேரளா செல்லும் சாலைகளில் முற்றுகை


கேரள அரசின் போக்கைக் கண்டித்து இன்று கேரளாவுக்குச் செல்லும் மலைப் பாதைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.

ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மாநிலத்திற்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். கட்சி சார்பின்றி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் லோயர்கேம்ப் பகுதியில் இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோரும், கம்பம் மெட்டுவில் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன், போடி மெட்டுவில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ., முருகன்ஜி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

No comments:

Post a Comment