மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
Thank you for sharing...
ReplyDeletehttp://pregnancycalculator-a2z.blogspot.com
Useful information to all.
ReplyDeleteVery useful message
ReplyDeleteTamil health tips are very useful. Thank you so much.
ReplyDeleteVery useful information. Thank you so much.
ReplyDeletethank uuu.....for ur useful tips
ReplyDeleteவயதான ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள்
ReplyDeleteப்ராஸ்டேட் பிரச்சனையா ?
ப்ராஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்ப்பை வாயை சுற்றி இருக்கும் ஒரு சிறிய உறுப்பு .
வயதாகும் பொழுது நமது உடலில் உள்ள அநேக உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன .முடி வெளுக்கிறது ,தோலில் சுருக்கம் விழுகிறது கண்களில் காடராக்ட் (புறை) ஏற்படுகிறது.இதே போல் வயதாகும் பொழுது ஆண்களுக்கு சிறுநீர்ப்பையிலும் ,ப்ராஸ்டேட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .இந்த மாற்றங்களினால் ஏற்படும் சிறுநீர் கழிக்கும் சிரமங்களே பொதுவாக ப்ராஸ்டேட் பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது .
ப்ராஸ்டேட் பிரச்சனை வயதான காலத்தில் மிக அதிகமாக காணப்படுகிறது.வயதாக வயதாக இந்த வியாதியால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கூடுகிறது.பொதுவாக 55 வயதில் 25% ஆண்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்.75 வயதில் 50% ஆண்களுக்கு இந்த வியாதியின் தாக்குதல்தென்படுகிறது.
இந்த வியாதியால்ஏற்படும் அறிகுறிகள்
1) சிறுநீர் மெலிதாக சொட்டு சொட்டாக வெளியேறுதல்.
2)சிறுநீர் விட்டு விட்டு வெளியேறுதல்
3)சிறுநீர்கழிக்கும் போது மிக்க வேண்டி இருந்தால்.
4)சிறுநீர் வெளியேற நேரமாகுதல்
5)சிறுநீர்வெளியேற முடியாமல் போவது .
6)சிறுநீர் அடிக்கடி கழித்தல்.
7)சிறுநீர் அவசரமாக வெளியேறுதல் .
8)சிறுநீர் நோயாளி யின் கட்டுப்பாடின்றி வெளியேறுதல்.
மருத்துவரின் ஆலோசனை அவசியமா?
ப்ராஸ்டேட் பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், சிறுநீர் வேகம் அளக்கும் பரிசோதனை, இரத்ததில் (PSA) அளவு, ஆகியவை மருத்துவரின்; ஆலோசனைபடி செய்வது கொள்வது அவசியம்.
ப்ராஸ்டேட் புற்று நோயால் ஏற்படும் அறிகுறியும் சாதரன ப்ராஸ்டேட் கட்டியால்ஏற்படும் அறிகுறியும் ஒன்றே.
*ஆகவே வயதான ஆண்களுக்கு சிறுநீர்கழிக்கும் சிரமங்கள் ஏற்படும் பொழுது மருத்துவரிடம் பரிசோதித்து அந்த நபருக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் தாக்கம் இல்லையென்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
Dr.M.V.Ramesh Babu – 9442533654
Abhiman Kidney Centre, Madurai ( Issued in view of public interest )
Very useful and nice tips and suggestion you have posted here for the treatment for health fitness.
ReplyDeletefertility center in chennai