3 பேரின் தூக்கை ரத்து செய்யக் கோரி பிரதமர், ஜெயலலிதாவுக்கு ஒரு லட்சம் பேர் கடிதம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி சேலத்தில் ஒரு லட்சம் பேர் பிரதமர், தமிழக முதலமைச்சர், ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு வரும் 9ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளன. இந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இரயில் மறியல், மனித சங்கிலி, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆளுநர் ஆகியோருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் கடிதம் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கடிதங்கள் அனுப்ப உள்ளனர்.
No comments:
Post a Comment